பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நப்புன்னை

"எங்கள் குடியின் கதை அஃது" என்று சொல்லி ஒரு பாட்டியிடம் கொண்டு செல்கிறாள் தோழி.

2

பாட்டி கூறுகிறாள்: "முருகனார் தெரியுமே, நப்பின்னையின் தந்தையார்! வள்ளி அவர் மனைவி—நப்பின்னையின் தாய். ஒரு நாள் நடந்த காட்சி என் கண்முன் இன்று கண்டதுபோல் இதோ தோன்றுகிறது.

"முருகனும் வள்ளியும் மணந்து பேரின்பப் பெருவாழ்வு வாழ்கின்றனர். குழந்தைச் செல்வமும் செழிக்கின்றது. மக்களைப் பெற்று அவர்கள் மகிழ்கின்றனர். ஓராண் குழந்தை—ஒரு பெண் குழந்தை—இவை செல்வமாக வளர்கின்றன: குடிக்கேற்ற குணம் சிறக்கின்றது சுற்றுப்புறத்துக் குழந்தைகள் ஏழை என்றோ செல்வர் என்றோ வேற்றுமை பாராட்டாது இந்தக் குழந்தைகளுடன் மனமொத்து விளையாடிவருகின்றன.

"விருந்தின்றி உண்ணாத மேன்மைக் குடி" என இவர்களை எல்லோரும் போற்றுகின்றனர். அடையாத பெருங்கதவம் அனைவரையும் வரவேற்று, முருகனாரையும் வள்ளியம்மையாரையும் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராக்கி வளர்க்கின்றது. ஊரிலே திருவிழா என்றால் இவர்கள் வீட்டில்தான் எல்லோருக்கும் விருந்து. ஒரு நாள் இந்திர விழா : வீட்டின் பின்புறத்து அறையில் பாலும் தயிரும் சால்சாலாக வீற்றிருக்கின்றன. தேனும் நெய்யும் வானத்திலிருந்து இறங்குவதுபோல உறிகளில்

தொங்குகின்றன. வாழைப் பழங்கள் தோரண மிட்டதுபோலக் கயிற்றில் ஏறித் தவம் செய்கின்றன. மாவும் பலாவும் மலைமலையாகக் குவிந்துகிடக்கின்றன. வழக்க-

17

2