பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நப்புன்னை

"'இந்தக் குழந்தைகள் தொல்லையே தொல்லை! பேசாமல் ஓர் இமைப்போதும் இருப்பதில்லை! இதனை உருட்டுகின்றார்கள்; அதனை உடைக்கின்றார்கள்; 'ஓ' என இரைகின்றார்கள். என்ன சொல்வது என்றே தெரியவில்லை!' என இரைகின்றார் வள்ளி அம்மையார். 'குழந்தைகள் என்ன கல்லா? காலும் கையும் இருந்தால் ஓடி ஆடத்தானே செய்யும்! குழந்தைகள் விளையாடுகிற இடத்தைப் பிடுங்கிக்கொண்டால் அவர்கள் வேறு எங்கே போவார்கள்? இப்பொழுது ஒன்றும் முழுகிப் போகவில்லை. இரண்டொரு சால் பாலும் தயிரும் தேனும் நெய்யும் இன்னும் வரும். ஆகையால், வள்ளி! விருந்தாளிகள் மனம் வருந்துவார்கள் என நீ ஒன்றும் கவலைப்பட வேண்டா' என்கிறார் முருகனார்.

"'கவலைப்பட வில்லை. பொருள்கள் பாழாகலாமா? இஃது ஏன் இந்தப் பிள்ளைகளுக்குத் தெரியாது போகிறது? நம் நப்புன்னையைப் பாருங்கள்! ஏதாவது இரைகின்றாளா? உணவு கொடுக்கக் காலந் தாழ்த்தாலும் முணுமுணுப்பதில்லை; அன்று போட்ட இடத்திலேயே இன்றும் கிடக்கின்றாள்; வருவோருக்கு எல்லாம் நிழல் தருகின்றாள்; பூப்பூத்து உதிர்க்கின்றாள்; புன்னைக் கொட்டையைப் பிள்ளைகளுக்கு விளையாடக் கொடுக்கின்றாள். நப்பின்னை! உனக்கு உன் அக்காள்போல ஆகவேண்டும் என்ற உயர்ந்த நோக்கமே இல்லை' என்று வள்ளியம்மையார் புன்னையின் சிறப்பினை அவள் மனங்கொள்ளப் பரக்கப் பேசுகின்றார்.

முருகனார் விழுந்து விழுந்து சிரிக்கின்றார்; 'நப்புன்னைபோல நப்பின்னையும் வேரூன்றி மரமாக வளரவேண்டும் என்று விரும்புகிறாயா?' என்று எள்ளி நகை-

19