பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

வெளுக்கின்றது. கதிரவன், காட்சி அளிக்கின்றான். காலம் கண்ட பாட்டனார் என்று கதிரவனை இந்தச்சிறுமியர் அழைப்பர். திங்களில் இருக்கிற ஆலமரத்துக் கிழவிதான் பாட்டி: வான்மீன்கள் எல்லாம் வானப் பாப்பாக்கள்—சிறுமியர் உறவின்முறை அப்படி இருக்கிறது.

" 'ஆதலின், கதிரவனைக் கண்டதும் ஓடோடியும் சிறுமியர் வருகின்றனர். வள்ளியோ, நாள்தோறும், 'நப்புன்னை, நப்புன்னை !' என்றே புலம்பிக்கிடக்கின்றனள்; இன்று பொழுது விடிந்ததும் 'நப்புன்னை' என்றே கண்ணைக் கசக்கி அழுதுகொண்டு வருகின்றாள், முருகன் மனம் உருகுகிறது. கள்ளமற்ற உள்ளமல்லவா பிள்ளை உள்ளம் ! முன் விளையாடிய இடத்தை அவன் போய்ப் பார்க்கின்றான். இரண்டொரு சிறிய இலைகள் மேலே தெரிகின்றன. புன்னைக்கொட்டை மரமாக வாழத்தொடங்கி, இலைவிட்டுச் சின்னஞ்சிறு செடியாக இருக்கிறது. 'வள்ளி ! வள்ளி ! நப்புன்னைப் பாப்பா உன்னைப்போல் இத்தனை நாளாக அழுது புலம்பியது; அம்மாவைப் பார்க்கவேண்டும் என்று வருந்தியது; மணலையும் கீறிக்கொண்டு இதோ வந்து தலையை அசைத்துக் கொஞ்சுகிறது பார். வாவா!' என்று களிக்கூத்து ஆடுகிறான் முருகன். வள்ளி ஓடோடியும் வருக்கின்றாள். மற்றைய சிறுமியர்தம் கொட்டைப் பாப்பாக்களை, மழை, தன் ஊருக்கு அடித்துக்கொண்டு

போய்விட்டது. அவர்களும் புன்னைச் செடியைப் புதுமையோடு பார்க்கின்றனர். வள்ளி, தன் நெற்றியை நெறித்து நிற்கின்றாள். 'என்ன, நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா?' என்று சொல்லிக்கொண்டே மணலைக் கீறிக் கீழே புன்னைக்கொட்டையை முருகன்

26