பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

கொள்ளும் அன்புள்ளம் படைத்த நப்பின்னையைக் காதலியாகப் பெற்ற நானே தவமுடையேன். வாழி நப்பின்னை! வாழி நப்புன்னை! நாளையே மணக்கின்றேன்" என்கின்றான் கண்ணன்.


"விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்துஇனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே!
அம்ம! நாணுதும் நும்மொடு நகையே
விருந்திற் பாணர் விளர்இசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு கொண்க! நீ நல்கின்
நிறைபடு நீழல் பிறவும்ஆர் உளவே !"

—நற்றிணை 172.

[ஆயம் — தோழிக் கூட்டம்; காழ் — கொட்டை; அகைய — கப்புவிட்டுவளர; நுவ்வை — உங்கள் அக்காள்; கடுப்ப — போல; வான் கோடு — வெள்ளையான சங்கு; இலங்கு — விளங்குகிற; கொண்க — தலைவனே; நல்கின் — அருள் செய்தால்; ஆர் — அசை.]

30