பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

4

அவன் எண்ணம் அவ்வாறு ஓடுகிறது. பாங்கனிடம் அவன் கூறியதும் நினைவுக்கு வருகிறது.....

அவளைக் கண்டபின் பழைய வழக்கப்படி அவன் தன் கலைதெரி கழகத்திற்குள் நுழைகின்றான். அங்கே தோழர்கள் கூடிப் பாடுகின்றனர்; பேசுகின்றனர்; நுண்பொருள் விரிக்கின்றனர்; ஆடுகின்றனர். அவர்களுக்கு இதுவரை உயிர் என விளங்கியவன் அவன்; இன்று சும்மா இருக்கின்றான்: ஏதோ பார்க்கின்றான். என்ன? ஒன்றும் இல்லை. குருடா? செவிடா? கல்லாகச் சமைந்துவிட்டானா? கலைப்போக்கில் கருத்தினைப் பறிகொடுத்தவர்கள்—இதனை—அவன் நிலையைக் காணவில்லை. ஆனால், அவன் உயிர்த்தோழன்—பாங்கன்—இதனைக் காண்கிறான்.

அவனைத் தோழன் தனி இடத்திற்குக் கொண்டு செல்கிறான். "ஏன் இந்த வாட்டம்—இந்த வெறித்த பார்வை? என்ன நேர்ந்தது? இதோ என்னைப் பார்! என்னிடத்திலுமா ஒளிவு மறைவு ?" என்றெல்லாம் தோழன் கேட்கிறான். எல்லாம் ஒருதலைப் பேச்சே ! தோழனுக்குக் கண்ணீர் கலங்குகிறது.

பெருமூச்சு விடுகிறான் அவன் ; காதற் கொந்தளிப்பினை மெல்ல வெளிவிடுகிறான்:

"குணப் பெருங் குன்றே! கலங்கா நெஞ்சமா கலங்குகிறது? 'பெண்ணுக்குத் தோற்றேன்—மனதைப் பறிகொடுத்தேன்'—என்று நீயா பேசுவது மலையமானும் உனக்கு ஒவ்வான். வெற்றியே உனது. நீயா இவ்வாறு கருத்தையும் கலையையும் உரத்தையும் உறுதியையும்

34