பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

கண்ணும் அவளுடைய உயிர்த்தோழியே. தோழி, உலகறிந்தவள்; அன்பு வடிவானவள். தோழியும் அவளும் ஒரே உள்ளம். தொட்டிற் பழக்கம் அது. தோழிமேல் படிகிறது அவள் நாட்டம். "இவளே இனி வேண்டுவன செய்யக் கூடியவள்"—அவள் பார்வையின் பொருள் எல்லாம் இப்படி அவனுக்கு விளங்குகிறது. அவனும் அவளும் ஒருவர் அல்லரோ இன்று!

6

தோழியின் பின்செல்கின்றான் அவன்; பேசும் வாய்ப்பினை எல்லாம் பயன்படுத்திப் பேசுகிறான்; அன்பொழுகப் பேசுகிறான்; நெஞ்சுருகப் பேசுகிறான்; உள்ளத்தினைத் திறந்து வைத்தது போலப் பேசுகிறான். ஆனால். நேரே பேசக்கூடிய பேச்சா இது? தோழிக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை; பின்னர்ச் சிறுகச் சிறுக நிலைமை விளங்குகிறது. எனினும், உடனே அவள் உடன்பட்டுப் பேசும் பேச்சா இஃது? அவனைப் போகவிட்டுக் காண்கிறாள். துடிதுடிக்கும் அவன் மனம் இதற்குள் உடைகிறதுபோல் தோன்றுகிறது.

யாரை நோவது? தோழியை நேரே நொந்து இகழலாமா? பண்பாடாகுமா அது? தலைவியை நோவதா? எப்படித் துணியும் அவன் மனம் அவளை நொந்து பேச? இரங்குகிறான் அவளுக்காக."என்ன செயற்கரிய செயல்!

என்னை உய்யக்கொண்ட செயல்! மேலும் என் செய்வாள்?" அவள்தான் இவளிடம் தன்னை அனுப்பியதனையும் இவ்வாறு கூறிவிடுகின்றான் அவன், தன் முணூமுணுப்பில். "மேலும் இச் சுமையைப் பொறுக்கமுடியாமையால் அவள் பார்வை என்னை இவளிடம் அனுப்பியது.

38