பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எல்லாம் அவளுக்கே

மெய்ம்மறந்து நிற்கிறான்; ஊற்றின்பம் வேறு நாடுவானா ? ஐம்புலனில் அந்தப் புலனை மறந்துவிடுகிறானோ?

காதலரின் காதலுக்கு எனவே இயற்கை அமைக்கும் சூழல் இஃது. அருவியின் தாலாட்டே காதலியைத் தூங்க வைக்கின்றது. காதலன் என் செய்வான்? காதலன் கைத்திறம் வல்லவன்; கலைஞன். காதல் விளையாட்டு இல்லையானால் கலை விளையாட்டு உண்டு. கவலையற்ற நிலையில், பசியற்ற நிலையில், மன எரிவற்ற நிலையில், காதல் வெள்ளமாய்ப் பொங்கிய உணர்வு, காதலி தூங்கியவுடன், கலையாக மாறிப் பிறக்கிறது. காதலனுக்குத் தூக்கம் வரவில்லை. அவன் இயற்கை விருந்தினைத் துய்க்கின்றான்; உணர்வு விருந்தாகத் துய்க்கின்றான்; காதலியின் காதலையும் அழகினையும் காண்கிறான்; தன்னை மறக்கின்றான். முன் தான் கொண்டுசேர்த்த சங்குகள் அங்கே குவிந்து கிடக்கின்றன. தானற்ற பெரு நிலையில் அவன் சில சங்குகளை எடுக்கின்றான்; கருத்தில் கண்ட அழகினைச் சங்கில் காண முயல்கின்றான்; வாளரம் கொண்டு அராவுகிறான். உயிரற்றது உயிர் பெறுகிறது; சாவாத பெருவாழ்வு பெறுகிறது; கலையொளியே கண்ணொளியாக ஓளிர்கிறது; கலைஞனோடு பேசுகிறது அந்த அழகிய வளைகண்டு மகிழ்கிறான் கலைஞன்.

இரவில் திரியும் அவன், காண்கின்றான் இதனை "ஆ! ஆ! கலை தோன்றும் நுட்பம் கலைதெரி கழகத்தில் விளங்கவில்லை. இங்கு விளங்குகிறது. இயற்கையே வாழ்க! காதலே வாழ்க! கலையே வாழ்க!"

10

அந்த வளைகளே இவள் கையில் இன்று கலகல என இவனை வரவேற்றுப் பாடுகின்றன. அந்தக் கலைஞன்

43