பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

ஆனால், எதிர்பாராத கற்பாறையாம் வறுமை வாழ்வில், நல்ல குடியில், அன்புக் கூவல் சுரக்கிறது. வற்றாத அன்பு. அங்குச் சென்று வருத்தம் எல்லாம் நீங்க, இன்பம் அடைகின்றனர் அப்பெரியோர்; மேலும் உலகினைத் திருத்தச் செல்கின்றனர். இவ்வாறு காண்பார் அவர்."

"இப்போது தெரிகிறதா வருத்தம்? நம் குடும்பம் இத்தகைய சிறு கூவல் அன்றோ? இது வற்றாத வளம் படைத்துச் செல்வத்தில் சிறந்திருந்தால் எப்படி இருக்கும்! இப்படி எண்ணி வருந்துவார் இங்கிருந்தும் இந்த வருத்தத்தில்தானே மாழ்குகிறார்? இங்கிருந்து வருந்தினால் வருத்தத்திற்கு முடிவு இல்லை; அங்கு வருந்தினால் விரைவில் பொருள் தேடி வர முடியும்."

"ஆனால், கொடிய காடாயிற்றே!"

"என்ன கொடுமை! யானை போன்றவர் புழுங்கி வருத்தம் தீரும் வழிதானே! கூவல் இல்லையா, நடை வருத்தம் தீர! யானை வருத்தம் போமானால் இவர் வருத்தம் போகாதா? வருத்தம் தணியும் காடுதானே அஃது? அருவழி வருத்தம் தோன்றாது; அறவழி வருத்தமே தோன்றும். அஃது உன் வருத்தம். அது தீரப் பணம் வேண்டும். அதனை விரைந்து சென்று, மிக விரைந்து முயன்று கொண்டுவருவர். யானை போன்றார் துணை உண்டு. கல்லில் நீர்போல எதிர் பாராதபடி புதையல்போலச் செல்வம் எதிர்கிடக்கும். ஆதலின், அவர் வருத்தம் விளங்கவில்லையா? இதற்கு வருந்தலாமா?"

"என் செய்வேன்? மனம் கேட்கவில்லையே!"

"நீ அறிவுடையவள் ஆயிற்றே! எதனையும் பொறுப்பாயே! உலகம் வாழவேண்டும் என்று

54