பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதுமணப் பெண்

கள் இங்கொன்றும் அங்கொன்றும் மலர்கின்றன. இதோ எல்லாம் பூத்துச் சிரித்து மகிழ்கின்றன. வான்மீன்களும் முல்லைப் பூப்போல இங்கொன்றும் அங்கொன்றும் பூப்பதுபோலத் தோன்றுகின்றன. இருட்டியதும் வானமெல்லாம் வான்மீன்கள் எப்படியோ நிறைந்துவிட்டன. இந்த இன்பப் பொறிகள் தலைவியைக் கண்டு பழைய தோழி போலக் கண் சிமிட்டி மின்னுகின்றன. காலம் தாழ்த்து வந்த காக்கை கரைந்துகொண்டே மரத்தில் போய்த்தங்குகிறது. "என்ன, காகம் இந்த நேரத்தில் கரைகின்றது! விருந்து வருகிறதா என்ன?” என்று தலைவி தனக்குள் பேசிக்கொள்கிறாள்; வீட்டின் வெளியில் விளக்கேற்றி முல்லைப் பூவைத் தூவி வழிபடுகிறாள்.

ஏதோ காலடி கேட்கிறது. அவள் திரும்பிப் பார்க்கிறாள். ஒருவர் வருகிறார். அறிவுடன் அன்பும் கலந்து ஒளிரும் கண்கள்...அறிவு உழுத நெற்றி...காலத்தோடு அநுபவமும் சேர்ந்து திரைத்த கன்னங்கள்...உள்ளம் தூயதானதுபோல நரை பழுத்த தாடி...உறுதியை வற்புறுத்தும்

மோவாய்க்கட்டை...வழி நடந்த களைப்பு... முதுமையின் இளைப்பு...பயணத்தில் புழுதி படிந்த வெள்ளாடை...இவ்வாறு ஒருவர் காட்சியளிக்கிறார். 'தலைவர் என்னிடம் பலமுறை பேசிய ஆசிரியர்...பாவாணர்...முதுபேரறிஞர்...இவர்தாம்' என இவளுக்குத் தோன்றுகிறது. அவருடைய பாடல்கள் அறிவுரைகள் என்று தலைவன் கூறியவை எல்லாம் அவர் வடிவத்தில் இவள் காண்கின்றாள்; அவை காதில் ஒலிக்கின்றன. வழிபடச் சென்ற கடவுள் நேரே வந்தாற் போன்ற மகிழ்ச்சியில் இவள் முழுகுகிறாள். இதற்குள் பெரியவரும் வாயிலை அடைகிறார்; "அம்மா, ஊர்கிழார் இருக்கின்றாரா?" எனக் கேட்கின்றார். அன்பும், இன்ப-

57