பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதுமணப் பெண்

கபில நிறம்? அதுவும் அடுப்பொளியில் ஒளிர்வது மற்றும் ஓர் அழகு! என்ன வளைவு வளைவாகப் பரவி மேலெழுந்து செல்கின்றது? இதுவரை நான் காணாத அழகிய காட்சி!"

"என்ன, ஆசிரியர்போலப் பாடத் தொடங்கிவிட்டாயா?"

"இல்லை. எங்கே மதம் கெடுகின்றதோ என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். நல்ல காலமாக கடம்ப மானிறைச்சியும் நெய்யும் நறுமணம் வீசின. பக்கத்திலிருந்த உலர்ந்த கிளைகள் விறகாக வேள்விசெய்தன. சிறிது ஈர விறகும் கிடந்து புகையின் அழகினைக் காணச்செய்தது!"

"ஆம்!கண்ணும் சிவந்து உள்ளன. நம்பவே முடியவில்லையே! வாராவிருந்து வந்துளதே என்று எண்ணிய ஏக்கத்தை எல்லாம் இன்ப வெள்ளமாக மாற்றிவிட்டாயே! உடல் எல்லாம் வாடியுள்ளாய்!"

"உள்ளமெலாம் தளிர்த்துள்ளேன்...வாட்டம் என்ன? விருந்தினை எண்ணியபோது, அவர் பாடலே நினைவு வந்தது. அவற்றைப் பாடிக்கொண்டே சமையல் செய்தேன். வாட்டமே தெரியவில்லை. எனக்கு ஒரு பெரு மகிழ்ச்சி. பெரு மக்கள் வாழ, அவர் வழி நின்று உலகிற்கு உழைப்பதன்றோ மக்களாய்ப் பிறந்ததன் பயன்? இன்றுபோல என்றும் நம் வாழ்வு இவ்வளவு பயனுடையதாய், இன்பமுடையதாய்க் கழியுமோ? என்ன பார்க்கிறீர்கள்? கரி பூசிக்கொண்டு அலங்கோலமாக இருக்கிறேனென்றா?"

61