பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதுமணப் பெண்

உறுதி கூறுவதுபோலப் பல்லி மற்றொரு முறை 'டக் டக்' எனப் பேசுகிறது. "வாழ்க!" என்று உள்ளுக்குள்ளே பாடுகிறாள் தலைவி.

6

இந்தச் சிறு கதையைப்பத்து வரியில் பாடுகிறார் இளந்தேவனார் என்ற சங்கப் புலவர்;

பைங்கண் யானைப் பரூஉத்தாள் உதைத்த
வெண்புறக் களரி விடுநீறு ஆடிச்
சுரன்முதல் வருந்திய வருத்தம் பைபயப்
பாஅர் மலிசிறு கூவலில் தணியும்
நெடுஞ்சேண் சென்று வருந்துவர் மாதோ
எல்லி வந்த நல்லிசை விருந்திற்குக்
கிளரிழை அரிவை நெய்துழந்து அட்ட
விளர்ஊன் அம்புகை எறிந்த நெற்றிச்
சிறுநுண் பல்வியர் பொறித்த
குறுநடைக் கூட்டம் வேண்டு வோரே.

நற்றிணை 41.

[பரூஉ—பருத்த; நீறு—புழுதி; சுரன் முதல்—பாலைவன வழியில்; பைபய—மெல்ல; பாஅர்—பாறை; சேண்—தூரம்; எல்லி—இரவு; கிளரிழை—பிரகாசிக்கும் ஆபரணம்; அரிவை—பெண்; விளர்—வெள்ளிய கொழுப்பு].

65

5