பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தினசரியா பாட்டு?

களித்த வீடுகள் தோன்றாமல் குறுகி அங்கே ஓடி ஒளிகின்றன; அதுபோலவே வரலாற்று மலைமேல் ஏறி ஒற்றுமைக் காட்சியாகக் காணும்போது, நாம் கண்டறிந்த பல நிகழ்ச்சிகள் பொருளற்று அங்கே இடம் பெறாது மறைகின்றன.

முதல் உலகப் போரில், எம்டன் என்ற ஜர்மானியப் படைக்கப்பல் குண்டு வீசியதனை, அந்நாளில் சென்னையில் வாழ்ந்த நாங்கள் மறந்திருக்கமுடியாது. ஆனால், உலகப் போரின் வரலாறு எழுதுவோர், தம் ஒற்றுமைக் காட்சியில் இதனைக் காணமுடியாது. எங்கோ ஒரு மூலையில் ஒரு காலத்தில் எழுந்த பொருளற்ற நிகழ்ச்சியாக அஃது ஒழிகிறது. ஆனால், அக் காலத்தில் அதனைப் பற்றிய தமிழ்ப் பாட்டொன்று ஆயிரக்கணக்கில் விற்றது. எல்லாச் செய்திகளும் இப்படி மறைந்து ஒழிவதில்லை. சந்திரகுப்த மௌரியரின் வெற்றி, பானிப்பட்டுச் சண்டைகள், சிப்பாய்க் கலகம் என்று எள்ளப்பட்ட இந்திய விடுதலைத் திருப்போர்—இவை என்றென்றும் வரலாற்றில் இடம் பெற்று விளங்கும். வரலாற்றுக் குறிப்பினைப் பற்றிப் பாடுகிற புலவன் "நான் பாடும் குறிப்பு எம்டன் குண்டு வீச்சுப்போல மறைந்தொழியுமா? சிப்பாய்க் கலகம்போல மக்கள் மனத்தில் என்றென்றும் நிலைத்திருக்குமா?" என்ற இதனை எவ்வாறு அறியமுடியும்? அறியமுடியாது. இவற்றைப்பற்றிப் பாடுவது, வளர்ந்து செல்லும் வரலாற்றோடு போட்டியிட்டுச் சூதாடுவதாகத்தான் முடியும். நாளை வரும் பலாப் பழத்தினும் இன்று வரும் களாப் பழம் மேல்என்பார், இப்படிஎண்ணிப் பாடிமகிழ்வோர். அவர்கள், இன்றுள்ளாரது பாராட்டில் மகிழ்ந்து, அன்று வருவாரது பாராட்டை இழக்கலாம். மாலையில் புற்றீசல் எனக்-

69