பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

கிளம்பிக் காலையில் மறையும் தினசரிப் பத்திரிகைகளின் கலை, இந்நாளின் சிறந்த கலையாம். இதனை நாட்காலைக் கலை எனலாம். பாவலன், இவ்வாறு இன்றைக்கென வாழும்போது, பாட்டுக் கலையை மறந்து நாட்காலைக் கலையில் ஈடுபடுகின்றான். இவன் உணர்ச்சியின் உண்மை எல்லாம், "குடிகாரன் பேச்சுப் பொழுது விடிந்தால் போச்சு" என்ற பழமொழிக்கு இலக்கு ஆகும்.

அகமோ, புறமன்றி இல்லை. புறத்தினை உயர்த்துவதாலேயே அகத்தினை எட்டிப்பிடித்துயரலாம். அருவமாம் நிலையை உணர, உருவத்தினைப் பற்றவில்லையா? கட்புலனாகாக் கடவுளைக் காட்டும் சட்டகம் வேண்டும் அன்றோ! அகத்தினை உணரப் புறத்தினைப் பற்றவேண்டும். சங்கப் பாவலர்கள், அரசியலைத் தூய்மைப்படுத்திய கலைஞர்கள், குரவர்கள் - இவ்வாறு வரலாற்றில் மூழ்கியவர்கள் வரலாற்றுக் குறிப்பினை எவ்வாறு பாடாது இருத்தல் கூடும்? எவ்வாறு மறத்தல் கூடும்? அவற்றினைச் சுட்டித்தானே மேலுயர்த்த முயலவேண்டும்? இக் குறிப்புக்களை மறவாது பாடினால், அவர்கள் பாடல் பாட்டுக் கலையாகுமா? நாட்காலைக் கலையாக அன்றோ உடனுக்குடன் மறைந்தொழியும்? ஈதே இங்குள்ள சிக்கல்.

வரலாறு, பாட்டாகாது என்று நாம் கூற வரவில்லை. ஒரு நாட்டின் வரலாற்றையோ, ஓரரசன் அல்லது பெரியாரின் வரலாற்றையோ, ஓர் அரசகுலத்தின் வரலாற்றையோ முழுப்பொருளாகக் கண்ணும், மூக்கும், காதும், வாயும், கையும், காலும் வைத்து உயிர் கொடுத்துப் பாட்டாகப் பாடிவிடுவதே புலவர் செய்யும் புதுமையாகும். ஷேக்ஸ்பியர் எழுதிய வரலாற்று நாடகங்கள், நெப்போலியன் காலத்தைப்பற்றி ஹார்டி (Hardy) எழுதிய

70