பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தினசரியா பாட்டு?

புகுந்து, உயிர்க்குயிராய் நின்ற நாணம் எனும் மதிலையும் நூறி நுறுக்கித் தன் கைக்கொண்டு, முன்னைய நிலைமை அடியோடு அழியக் காதல் தீயினையும் கவலைத் தீயினையும் ஊர் சுடுவிளக்கமாக அவள் உள்ளத்தில் மூட்டிவிட்டான்." "ஈதே ஊரார் கூறும் பழி" என உவமை வழியேமெல்லத் தலைவியின் மனத்தில் உறைக்கக் கூறுகின்றாள் தோழி. ஈதே இயற் பழித்தல். நேரே இவ்வாறு பழிப்பது நாகரிகமன்று. தலைவியும் தலைவனும் வேறல்லர்; ஆதலின், தலைவியின் எதிரே பழிப்பதும், தலைவன் எதிரே பழிப்பதே ஆம். உவமை வழியாகக் கூறியதுமட்டுமன்று இங்குள்ள பண்பாடு. தன் வாயால் கூறாது, ஊரார்தம் வாயில் வைத்துக் கூறுவதும் பண்பாட்டின் பெருமையாகும். இவ்வாறு உள்பொருள் தோன்றுவதற்கு இறைச்சி என்று பெயர்.

"தொல்விகன் தொலையத் தோள்நலம் சாஅய்
நல்கார் நீத்தனர்.......குட்டுவன்
அகப்பா அழிய நூறிச் செம்பியன்
பகல்தீ வேட்ட ஞாட்பினும் மிகப்பெரிது
அலர்எழச் சென்றனர்"

என்பதே தோழி இயற் பழித்த பேச்சு.

5

தோழி எதிர்பார்த்தபடி, தலைவன் இயல்பாம் பெருமையானது பட, அதாவது, தோன்றப் பேசுகிறாள் தலைவி. ஊர் பழிக்கப் பொறுத்திருக்குமா அவள் அன்பு உள்ளம்? இயற்பட மொழியும்போது, தோழி இயற்பழித்த பேச்சைக் கொண்டு மொழிகின்றாள்; "நல்கார் நீத்தனர். உண்மையே ஆயினும்" என்று புகழத் தொடங்கி விளக்குகின்றாள்.

75