பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தினசரியா பாட்டு?

எல்லை வேங்கட மலையும் அதனைச் சூழ்ந்த காடுமே ஆம். அங்குத் தலைவனாக ஆண்டு வருபவன் புல்லி என்ற வீரன். மின்னல் வெட்டில் பாய்ந்து தாக்கி, வென்று மறைபவன் அவன். மிக விரைந்து பாயுமாம் அவன் குதிரை—கடுமா அஃது. அவனுடைய காட்டினை—இறந்து—கடந்து சென்றுள்ளார் தலைவர். "(கடுமான் புல்லிய காடிறந்தோரே.)"

அந்தக் காட்டின் புனைந்துரை அழகாக அமைந்துள்ளது. காடு—காட்டினைச் சுற்றிப் பெரிய மலைகள், (நெடுவரை)—மலைகளில் பெரிய பிளப்புக்கள் (விடர்கள் அல்லது குகைகள்)—இவை தோன்றுகின்றன. வறண்ட மலைகள் அல்ல—பச்சைப் பசேர் எனத் தோன்றும் வளம்மிக்க மலைகள் அவை. காடு நிறைந்த மலைகள் அல்லவா! ஆனால், கடுங்காடு அவை. கொடிய காட்டு விலங்குகள் நடையாடுகின்றன அங்கே. "யானைகளும், ஆணும்பெண்ணுமாக, இல்லற அன்பின் காட்சி விளக்கந் தந்து உலாவுகின்றன. தலைவரும் இவற்றைக் காண்பார் அல்லரோ? நம்மை நினைப்பார். நம் இல்லறத்தினை உறுதிப்படுத்தவேண்டும் என்ற படிப்பினையையும் அங்கே படிப்பார்" என்று தலைவி நினைக்கின்றாள்.

அம்மட்டுமா? அங்கொரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மலைச் சாரலில் காந்தள் நன்றாக மலர்ந்து கிடக்குமன்றோ! (அலர் கவிந்து மாமடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல் அது.) காந்தள், கைவிரல்களை விரித்தாற்போல் மலரும்—பாம்பு படம் விரித்துக் கொட்டாவி விட்டாற் போலக் காந்தள் மலரும் என்பர். "அரவு பைத்து ஆவித்தன்ன அங்காந்தள் அவிழ்ந்து அலர்ந்த" (1658) என்பது சிந்தாமணி. "காந்தள்,

77