பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

கூறும் அலர் பொருளற்றது; பொய்யானது" என்றும் சொல்லாமல் சொல்லிவிடுகின்றாள் தலைவி.

இவ்வாறு, நேர்முகமாக ஒருவரை ஒருவர் எதிர்த்துரையாடாமல், குறிப்பிற் பொருளுணரப் பேசும் நாகரிகப் பண்பாட்டினை என் என்பது! புனைந்துரைகள் வெறும் புனைந்துரைகளாக வளராமல் பேசும் பேச்சுக்கு ஏற்பப் பொருளூட்டம் தருவனவாக அமைவது சங்கப் பாக்களின் தனிச் சிறப்பாகும். சொற் சுருக்கத்தில் பொருட் பெருக்கம் வெள்ளமிடுகிறது.

தொல்கவின் தொலையத் தோள்நலம் சாஅய்
நல்கார் நீத்தனர்; ஆயினும் நல்குவர்
நட்டனர் வாழி தோழி குட்டுவன்
அகப்பா அழிய நூறிச் செம்பியன்
பகல்தீ வேட்ட ஞாட்பினும் மிகப்பெரிது
அலர்எழச் சென்றனர்: ஆயினும், அலர்கவிந்து
மாமடல் அவிழ்ந்த காந்தள் அஞ் சாரலின்
ஞால்வாய்க் களிறு பாந்தட் பட்டெனத்
துஞ்சாத் துயரத்து அஞ்சுபிடிப் பூசல்
நெடுவரை விடரகத்து இயம்பும்
கடுமான் புல்லிய காடு இறந் தோரே.

—நற்றிணை 14.

6

குட்டுவன் செம்பியன் அகப்பா நூறித் தீ வேட்டல், கடுமான் புல்லிய காடு—என்பவை சங்க கால வரலாற்றுக் குறிப்புக்கள். இவற்றினை நாம் உள்ளவாறு அறிய முடியாமையால் இக்குறிப்புக்கள்பாட்டின்பத்தினைக் கொலை செய்யவில்லையா என்பதே கேள்வி. குட்டுவன், செம்பியன், புல்லி என்பவை அந்நாளைய மக்களுக்குப் பெரிதும்

80