பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. நீயோ அறிவாய்!



1

அவன் வருகிறான். "அவளைக் காண்பதும் இன்பம்; அவள் சொல் கேட்பதும் இன்பம்; அவளோடு பேசுவதும் இன்பம்; அளவளாவுவதும் இன்பம்; அணைப்பதோ பேரின்பம்"—இவ்வாறு இன்புறத் துடிதுடிக்கிறது அவன் உள்ளம்; ஆனால், ஏமாற்றமே அடைகிறது. அவளைக் காணோம். அவளோடு விளையாடிவரும் தோழிமாரையும் காணோம். தானும் அவளும் தனித்துக் களித்த இடம் எல்லாம் அவன் சென்று பார்க்கின்றான். தினைப்புனம் வறிதே கிடக்கின்றது. அருவியோ தனித்துப் புலம்புகிறது. அந்த இடங்கள் எல்லாம் உயிரற்ற உடல்போலத் தோன்றுகின்றன. "என்ன ஆயினள்! எங்குப் போயினள்! என் உயிரே! எவ்வாறு வாழ்வேன் இனி!" என்று அவன் புலம்புகின்றான்; கலங்கு-

1