பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. பாவத்தைக் கட்டிக்கொள்கிறாள் !




தோழி : என்ன நல்ல நறுமணம் வீசுகிறது? என்றும் இல்லாத இந்தப் புதுமணம் எங்கிருந்து வருகிறது?

தலைவி : அந்தச் சோலையில் இருந்து வருகிறதா? — உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் புத்துயிர் பெற்றுப் புத்தொளி வீசிப் புதுமணம் கமழ்கின்றது. நான்மட்டும் மணம் போய், ஒளி போய், உயிரும் போக நிற்கின்றேன்; பழங்கண்ணிற் புழுங்குகின்றேன். அதோ பார்த்தாயா அந்த அழகிய சோலையை !

தோழி : நாமும் தழைப்போம். மாந்தோப்பு எப்படித் தழைத்துவிட்டது ! நம்பமுடியவில்லையே ! கிளை எல்லாம் தளிர்கள் ! கிளைகளும் பந்தரிட்டாற்போல நெருங்கிப் படர்ந்துள்ளன. பச்சைக் கற்களிடை-

83