பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவத்தைக் கட்டிக்கொள்கிறாள்!

இவற்றினிடையே பூந்தாது பார்த்தாயா? நீ சொல்கிற உவமை என்ன! நாம் அறிந்தனபோல இருந்தாலும், அவற்றைப் புதுப்புது வகையில் புதுப்புது நிலையில் திறம்படச் சேர்த்து அமைத்து வியப்பூட்டும் ஓவியத்தைப் பற்றிப் பேசுவாய். அந்த ஓவியம், எழுதும் கைத்திறம் படைத்த ஓடாவி கையில் பிடிக்கும் துகிலிகையின் நுட்பத்தில் ஈடுபடுவாய்: நிறம் பூசச் செவ்வரக்கில் தோய்த்தெடுத்துப் தீற்றிய பின்னும் செவ்வரக்கு நீ கூறும் துகிலிகையில் ஒட்டிக்கிடக்குமே, அது போலத் தலையில் சிவந்த பூந்தாதுக்களின் அழகே அழகு—உவமையை நன்றாக உணர்ந்தேனா?

தலைவி: பாடு உன் பாட்டை!

தோழி: என்ன அழகு! என்ன அழகு! எவ்வாறு புகழ முடியும்? புத்தம் புது மலர்—இன்றலர்ந்த மலர்—அதோ, வண்டுகள் பாடித் தேனை உண்டு மயங்குகின்றன!

தலைவி: நீயும் அதனழகைப் பாடி மயங்குகிறாய். தொலைவில் இருக்கும் இளவேனில் அழகு வீட்டிற்குள்ளும் வருகிறது.

தோழி: துன்பத்தில் இன்பமா?

தலைவி: ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும். துன்பத்தில் இன்பமும் துன்பமாம்.

தோழி: ஏன் அப்படி? துன்பத்தில் இருப்பார் இன்பம் துய்யாரா? பிறர் இன்பம் துய்ப்பது கண்டு வயிற்றெரிச்சலா?

தலைவி: ஏன் வயிற்றெரிவு வயிற்றெரிவு என்று சிறு மாக்கள்போல் பேசுகிறாய்?

91