பக்கம்:நற்றிணை 1.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

99


இறைச்சி : கோங்கம்பூ மலர்ந்ததாய்க் காடும் அழகு கொண்டிருந்ததென்பது, நீரும் மகிழ்வோடு தலையளி செய் திருக்கத், தலைவியும் தன் எழில் குன்றாளாய் இல்லற மாற்றிப் பெருமையடைவாள்' என்பதாம்.

49. அறிந்தால் என்னவோ?

பாடியவர் : நெய்தல் தத்தனார். திணை : நெய்தல். துறை : தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது. (1): சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்த தூஉம் (2) ஆம்.

( (து-வி.) இரவுக் குறியிலே தலைவனைக் கூடுதற் கான வாய்ப்பை எடுத்துக்காட்டித் தோழி, தலைவியை அதனை மேற்கொள்ளும் விருப்பினளாக்க முயலுதல் (1); தலைவன் இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைவியது ஆற்றாமையினைக் கண்டு வியப்பாள்போல இவ்வாறு கூறி தலைவன் விரைய வரைந்து கோடலே தக்கதெனக் கருதுமாறு தூண்டுதல் (2).]

படுதிரை கொழீஇய பால்நிற எக்கர்த்

தொடியோர் மடிந்தெனத் துறைபுலம் பின்றே; முடிவலை முகந்த முடங்குஇறாப் பரவைப் படுபுள் ஓப்பலின் பகல்மாய்ந் தன்றே;

கோட்டுமீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து

எமரும் அல்கினர்! 'எமார்ந் தனம்' எனச்

சென்றுநாம் அறியின், எவனோ-தோழி!

5

மன்றப் புன்னை மாச்சினை நறுவீ

முன்றில் தாழையொடு கமழும்

தெண்கடற் சேர்ப்பன்வாழ் சிறுநல் ஊர்க்கே?

கொண்டு

10

தோழி! படுகின்ற அலைகள் குவித்த, பாலைப் போன்ற வெண்மை நிறத்தையுடைய மணல்மேட்டி டத்தே விளையாட்டயர்ந்திருந்த வளைக்கையினரான ளமகளிர், அதனை நீங்கிச் சென்று, தம் தம் மனையிடத்தே உறங்கியபடி இருத்தலினாலே, கடற்றுறை தனிமையுற்று விளங்குகின்றது. முடித்தலையுடைய வலைகளால் கடலினின் றும் முகக்கப்பெற்றமுடங்குதலையுடைய இறால்மீன்களைக் காயவிட்டு, வந்து படியும் புள்ளினங்களை ஓட்டியிருத்தலி னாலே. பகற்போதும் ஒருபடியாகக் கழிந்து போயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/100&oldid=1627222" இலிருந்து மீள்விக்கப்பட்டது