பக்கம்:நற்றிணை 1.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

நற்றிணை தெளிவுரை


கொம்புகளைக் கொண்ட சுறாமீன்களைப்பற்றிக் கொணர்ந்த மகிழ்ச்சியினராக, எம் ஐயன்மாரும். இரவிற் செல்லும் மீன் வேட்டையினைச் கைவிட்டவராக. இல்லிடத்தே தங்கியிருப்பாராயினர். அதனாலே, மன்றத்துப் புன்னையின் பெரிய கிளையிடத்துள்ள நறிய பூக்கள். வீட்டு முற்றத்திடத்தேயுள்ள தாழையின் பூக்களோடு சேர்ந்து மணங்கமழ்ந்து கொண்டிருக்கும், தெளிந்த கடல்நாட்டவனான தலைவன் வாழ்கின்ற, நன்மை கொண்ட சிற்றூரிடத்தே சென்று. நாம் அவனது நினைவிலே மயங்கினேம் எனக்கூறி, அவன் கருத்தினை அறிந்துவரின் என்ன குற்றமாமோ?

கருத்து: அனைவரும் துயில, யாமே நின் பிரிவால் வந்துற்ற நோய் காரணமாகத் துயிலிழந்தோம். யாமும் இனிதே துயில் கொள்ளுமாறு, எம்மைப் பிரியாதேயிருக்கும் மணவாழ்வினை நாடாயோ' என்பதுமாம்.

சொற்பொருள்: முயக்கம்-வளைவு:

சுருங்கும் சுருக்கம். ஏம்-இன்பம்;

மய

இன்பத்தை விரும்பினோம்; மயங்கினோம்.

காய்தலாற் ஏமார்ந்தனம்.

அவ்வழி

விளக்கம்: 'துறை புலம்பின்று' என்றாள், வருதலை யாரும் அறியார் எனற் பொருட்டு 'பகன் மாய்ந் தன்று' என்றாள், கடலிடத்துச் செல்லும் பரதவரது இயக்கமும் இராதெனற் பொருட்டு. 'எமரும் அல்கினர்' என்றாள், அவராலும் ஏதமின்று என்பதனைக் காட்டுவற் பொருட்டு. இதனால், இல்லை நீங்கிச் சென்று, தலைவனை இரவுக் குறியிலே சந்தித்ததற்கு நல்ல சந்தர்ப்பம் என்று வற்புறுத்தினாள். இவ்வாறு கொள்ளின் இரவுக்குறி நயத்த லாயிற்று.

இனி, 'அனைத்தும் ஒடுங்கின இந்த இரவின் யாமத்தும், அவனைக் காணாதே வருந்தினமாய், யாம் மட்டுமே துயில் ஒழிந்து மயங்கினேம் எனக் கூறினாள்' எனக்கொண்டால், * தலைவியின் ஆற்றாமையை வியந்து வரைவு வேட்டலை நயந்தாள்' என்று ஆகும்.

  • கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து எமரும் அல்கினர்' என்றது, தலைவியது தகுதிப்பாட்டைக் கூறி. அவ்வாறே நும்மை அணைத்துத் தன்பாற் கொள்ளும் வேட்டம் வாய்த்தாலன்றி, இவளும் அமைந்திராத பெருங் காதற்றிண்மை உடையாளாய் அதனை மறவாள் என்றதாம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/101&oldid=1627223" இலிருந்து மீள்விக்கப்பட்டது