பக்கம்:நற்றிணை 1.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

நற்றிணை தெளிவுரை


வளைவினிடத்தே,

ஒருவர் புகுந்து மோதிக்கொள்ளும் அயலானாகிய அவனும் கதுமென வந்தானாக, என்னோடும் மோதிக் கொண்டனன். 'இங்ஙனம் வந்து மோதிய நின்னைக் கேட்பாரும் உளரோ இல்லையோ? அதனை அறிந்துகொள் என்று, யான் சினந்தேன். அவனோ, 'நின் பசலையும் புத்தழகினை உடையது' என்றான். அதற்கு எதிருரையாக 'எலுவ! நீ நாணம் உடையால் அல்லை' என்று கூறின வளாக. அவனிடமிருந்து விடுபட்டு வந்துவிட்டேன். அவனைப் பகைத்தோரும்; அவனையடைதலை விரும்புகின்ற தலைமையாளன் அவன் அவன் என்று கொண்டு, நறிய நெற்றி யினையுடைய அரிவையே! யான் அவனைப் போற்றினேன் அல்லேன். சிறுமையானது தன்பாற் பெருமை வந்து திடுமெனச் சேர்ந்த காலத்தும், அதளைத் தனக்குச் சிறப்பென ஆராய்ந்து அறியாதல்லவோ? அவ்வாறே, என் அறியாமையினாலேதான் யானும் அந்தச் சந்தர்ப்பத்தை இழந்தேன்!

கருத்து : 'தலைவன் எத்தகைய மகளிரையும் காமுற்றுப் பின்தொடரும் வெறியன். அதனால், 'அவன் தலைவியிடத்தே உண்மையன்பினாலே 'வந்தானல்லன்; என்பதாம்.

சொற்பொருள்: துணங்கை - மகளிர் கைகோத்துத் துணங்கை கொட்டியாடும் களியாட்டம். நொதுமலாளன்- அயலான். கதுமென - விரைய. தாக்கல்-வந்து மோதுதல்.

விளக்கம் : 'அறியாமையின்' என்றது. தலைவன் துணங்கை அயரும் களத்திலே பெண்வேடத்தோடு ஆடி யிருந்தான் என்பதை அறியாத தன்மையை, ‘அஞ்சி' என்றது, அவனை அங்குக் கண்டதும், அஞ்சியகன்ற தனது நிலையை. அதனை உணராத அவன், தன்னை விரும்பிக் குறிப்புக் காட்டிப் போவதாக நினைத்து, வேறுவழியாக முற்படவந்து, வளைவிடத்தே, எதிர்பாராது அவள் கைப் புகுந்து அவளை அணைத்தனன். அது குறித்தே அவள் அரற்றுகிறாள். அவனே, அதனை அஞ்சுங்குரல் எனக் குறித்தானாக யாணது பசலை' எனக் கூறியவனாக, அவள் தோள்களை ஆராயப் புகுகின் றான். அதன்மேற் பொறுத்தல் கூடாத நிலையில், 'நாணிலை எலுவ' எனக் கூறி அவள் விடுபட்டு ஓடுகின்றாள். இது, தலைவன். புதியளான பரத்தை ஒருத்தியைத் தன்பாற் ற் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/103&oldid=1627225" இலிருந்து மீள்விக்கப்பட்டது