பக்கம்:நற்றிணை 1.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

நற்றிணை தெளிவுரை


மின்னுநிமிர்ந் தன்ன வேலன் வந்தெனப் பின்னுவிடு முச்சி அளிப்ப ஆனாதே; பெருந்தண் குளவி குழைத்த பாஅடி, இருஞ்சேறு ஆ'டிய நுதல கொல்களிறு பேதை ஆசினி ஒசித்த

வீததர் வேங்கைய மலைகிழ வோற்கே?

10

தோழி! ஓங்கியுயர்ந்த தண்டினையுடைய மூங்கில்கள் நிரம்பிய மலைப்பிளப்பிடங்கள் எல்லாம் எதிரொலிக்கு மாறும் பாம்புகள் உயர்ந்த வரையிடத்துக் கிடந்தவாய் வருத்தமுற்றுப் புரண்டு ஒளிரவும், கடிய குரலைச் செய்தன இடியேறுகள். அவற்றோடு, விரைந்த செலவையுடைய மேகங்கள் - மிக்க துளிகளைச் சொரியத் தலைப்பட்டுப் பெயலும் நீங்காதே உள்ளது. அத்தகைய பெயலைக் கண்டதும், யான் அவ்வழியே நம் பொருட்டாக வரும் தலைவனுக்குத் துன்பம் உண்டாகுமோ எனக் கருதினளாக அஞ்சினேன். அதனால் வேறுபட்ட என் மேனியை நோக்கித் தெய்வம் அணங்கிற்றெனக் கருதிய அன்னையும், வெறி யாடலை ஏற்படுத்தினாள். மின்னலைக் கொண்டு செய்தமைத்தாற் போன்று ஒளிறும் வேலினைக் கைக் கொண்டோனாக, வெறியாடும் வேலனும் வந்தனன். பின்னி விடுதலையுடைய கொண்டையிற் பூவைக் குலையாதே காத்தலும் இயலாதாயிற்று. பெரிதுங் குளிர்ச்சி வாய்ந்த காட்டுமல்லிகைக் கொடியினை மிதித்துச் சிதைத்த பரந்த அடிகளையுடைய கொலைவல்ல களிறானது, கரிய சேற்றிலே திளைத்தாடிய நெற்றியைக் கொண்டதாய், இளமைப் பருவத்தைக் கொண்ட ஆசினியை ஒடித்துப் போட்டபின், வேங்கைப் பூக்கள் சிதறிக்கிடக்கின்ற வேங்கை மரத்தினடி யிலே சென்று தங்கா நிற்கும்- அத் தன்மையுடைய மலைக்கு உரியோனாகிய நம் தலைவனுக்கு; இனி நாம் தாம் எதனைச் செய்யமாட்டுவாம்? நீதான், அதனை எனக்குக் கூறுவாயாக. கருதது : இனித் தலைவனோடு களவிற்கூடி இன்புறுதல் வாயாது போலும்' என்பதாம்.

கொள்ள.

ஒளி

சொற்பொருள் : உடன்று - வருந்தி, மிளிர வீங்கு செலல் - விரைந்த செலவு. கனைதுளி - மிகக துளிகள். முச்சி - கொண்டை. குளவி - காட்டு மல்லிகை ஆசினி - ஆசினிப் பலா; பேதை ஆசினி - முதிராத ஆசினி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/105&oldid=1627227" இலிருந்து மீள்விக்கப்பட்டது