பக்கம்:நற்றிணை 1.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

நற்றிணை தெளிவுரை


அவன் தன் மனத்திற்குச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்

தூத்தகட்டு எதிர்மலர் வேய்ந்த கூந்தல் மணம்கமழ் நாற்றம் மரீ இ, யாம் இவள் சுணங்குஅணி ஆகம் அடைய முயங்கி வீங்குஉவர்க் கவவின் நீங்கல் செல்லேம்; நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி, நாளும் பிரிந்துறை வாழ்க்கை புரிந்துஅமை யலையே; அன்புஇலை வாழிஎன் நெஞ்சே! வெம்போர் மழவர் பெருமகன் மாவண் ஓரி கைவளம் இயைவது ஆயினும், ஐதே கம்ம, இயைந்துசெய் பொருளே!

10

என் நெஞ்சமே! கரிய பூவோடு, தூய பொற்

எனக்கே உரியையாயிருந்த கொடியையுடைய அதிரலின் றகட்டினைப் போலத் தோன்றும் பாதிரியின் பூக்களையும் எதிர் எதிர் பொருந்துமாறு வைத்து. வேய்ந்திருக்கும் கூந்தலினை உடையவள் நம் தலைவி யாவாள் மணம் கமழுகின்ற அந்தக் கூந்தலின் நறுமணத்திடத்தே பொருந்தி னேனாய் அவளுடைய பொற்சுணங்குகள் பரந்துள்ள மார்பகத்தினை முற்றவும் என் மார்போடு பொருந்துமாறு தழுவிக் கொள்வேன். மிகுதியான சுவையினைக் கொண்ட தான அந்த அணைப்பினைவிட்டு யான் விலகிப் போதலைச் செய்யேன் ஆயின் நீதானும் பொருளீட்டும் முயற்சியானது சிறப்பாக வாய்த்தலிலேயே எண்ணங் கொண்டுள்ளனை. பன்னாளும் இவளைப் பிரிந்து வாழும் அந்த வாழ்வினையே விரும்பினையாய் என்பால்

இல்லை. அதனாலே அன்பும் இல்லை நீ வாழ்வா போராற்றலைக் கொண்டவர் மழவர் கள். அவர்களின் பெருமானாகத் திகழ்ந்தவன் பெரு வள்ள லான 'ஓரி' என்பவன். அவனது கை வண்மையே போல யானும் வழங்கிப் புகழடையுமாறு பெரும்பொருள் எனக்கு வந்து வாய்ப்பினும் அதனை விரும்பேன். நுட்பமாக நீ ஈடுபட்டு விழையும் அந்தப் பொருள் முயற்சிதான் நினக்கே வாய்ப்பதாக!

யாக! வெ மைகின் றாயும்

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/107&oldid=1627229" இலிருந்து மீள்விக்கப்பட்டது