பக்கம்:நற்றிணை 1.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

107


கருத்து: 'இவளைப் பிரிந்து வரும் பொருள் எந்துணைப் பெரிதாயினும் அதனை வேண்டேன்' என்பதாம்.

சொற்பொருள்: மாக கொடி - கருங்கொடி. மரீஇ பொருந்தி. உவர்-சுவை; உவர்த்தல் கொண்ட உப்பினை யன்றிச் சுவை தருவது யாதுமின்று; ஆதலின் 'உவர்' சுவை யாகக் கொள்ளப்படும். ஆள்வினை-முயற்சி. புரிதல்- விரும்பல்.

விளக்கம் : கூந்தல் நாற்றம் மரீஇ' என்றது. கூந்தலே அணையாகக் கொண்டு துயின்று பெறுகின்ற இன்பமிகுதியை று வியந்து கூறியது. 'ஆகம் அடைய முயங்குதல்' ஆவது, வளியிடைப் போகா முயக்கம் ஆகும். 'என் நெஞ்சே' என்றது முன்னர் எனக்கே உரியையாயிருந்து, இதுகாலை எனக்கு எதிராகப் போகின்ற நெஞ்சமே என்பதாம். ஐது

என்றது மெல்லிதும் ஆம். 'ஓரி' கொல்லி. மலைத் தலைவன். 'வல்வில் ஓரி' எனப் புகழ்பெற்றவன். 'அதிரல் என்பது புனலிப்பூவையும், மோசிமல்லிகைப் குறிக்கும்.

53. அன்னை நினைத்தது!

நல்வேட்டனார். திணை :

பூவையும்

குறிஞ்சி.

பாடியவர் : துறை : வரைவு நீட்டிப்பத் தோழி சிறைப்புறமாகச் சொல்வியது.

[ (து-வி.) வரைந்து வருவேன் எனக்கூறிய தலைவனின் சொற்கள் வாயாவாயின. அதனால், தலைவியின் வாட்ட மும் மிகுதிப்பட்டது. இந்நிலையில், ஒருநாள் தலைவியும் தோழியும் உரையாடியிருந்த இடத்தருகே, ஒருசார் வந்து செவ்வி' நோக்கியபடி நின்றிருந்தான் அவன். கண்ட தோழி, தலைவிக்குச் சொல்வாளேபோல, அவனும் கேட்டுணருமாறு இப்படிக் கூறுகின்றனள்.)

அவனைக்

யான் அஃது அஞ்சினென் கரப்பவும் தான்அஃது அறிந்தனள் கொல்லோ? அருளினள் கொல்லோ? எவன்கொல், தோழி அன்னை கண்ணியது? வான்உற நிவந்த பெருமலைக் கவாஅன் ஆர்கலி வானம் தலைஇ, நடுநாள்

கனைபெயல் பொழிந்தெனக் கானக் கல்யாற்று முளிஇலை கழித்தன முகிழ்இன ரொடுவரும்

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/108&oldid=1627230" இலிருந்து மீள்விக்கப்பட்டது