பக்கம்:நற்றிணை 1.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

நற்றிணை தெளிவுரை


யாக உடுத்திருப்பவன்; நீலவண்ணமான ஆகாயத்தினையே தன் திருமேனி வண்ணமாகக் கொண்டிருப்பவன்; நான்கு பெருந் திசைகளையுமே தன் நான்கு திருக்கரங்களாகக் கொண்டிருப்பவன்; பசுமையான கதிர்களைக் கொண்ட தான மதியத்தினோடு, வெங்கதிர் ஞாயிற்றினையும் தன் இரு கண்களாகக் கொண்டிருப்பவன்; இவ்வுலகிடத்தே காணப்படுவனவாகிய எல்லாவற்றினுமாகத் தான் பொருந்தி நின்றும், அவை எல்லாவற்றையுமே தன்னகத்தே அடக்கிக் கரந்து கொண்டும், அநேகனாகியும், ஏகனாகியும் விளங்குபவன்; நான்மறைகளுக்கு முதல்வனாகவும் விளங்குபவன் அவன். ‘அத் தகையோன். இத் தொகைநூலும், இனிது உலகிடத்தே நிலைபெற்றுச் சிறப்படைவதற்கு அருள் செய்து காப்பானாக" என்பது கருத்து. வளை' எனச் சொற்பொருள் : தூநீர் - தூய நீர்மையும் ஆம். 'தூநீர் சங்கினத்தைக் குறிப்பதாக அப்போது கொள்க. வளை - சங்கு. நரலுதல் - ஆரவாரித்தல். திகிரி - சக்கரம்; படைக்கருவி வகையுள் ஒன்று; 'சுதரிசனம்' என நூல்கள் உரைக்கும். - தனைச் விளக்கம்: பரம்பொருளைத் தொழுது போற்றும் பக்திமை உடையவரது நெஞ்சகத்தே, முதற்கண் அப் பரம்பொருளது திருவடி நினைவே எழுதலால், 'மாநிலஞ் சேவடி ஆக' எனச் செய்யுளைத் தொடங்கினார். மாநிலம் பெரிய நிலவுலகம். வத முதல்வன்-வேதங்களை அருளியோன்; வேதங்களின் மூலப்போருளாகத் தானே அமைந்தவன்; வேதனாகிய ஆதிப்பிரமனுக்குத் தகப்பன். வேதமுதல்வனாகவும், தீதற விளங்கிய திகிரியோனாகவும் விளங்கும் பெருமான், இத்தொகைநூலும் என்றைக்கும் நிலைபெற்றுத் தமிழ்மொழியின் வளத்தை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கக் கருணை செய்வானாக" என்பது இதன் பொருள் முடிபு. E

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/11&oldid=1627122" இலிருந்து மீள்விக்கப்பட்டது