பக்கம்:நற்றிணை 1.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

111


என்னை அணைத்துக் கிடந்து அவன் அவன் துயில, அவன் முதுகைத் தைவரும் இன்பத்தால் யான் என் வருத்தந் தீர்வேன்' என்றதாம்.

55. சந்தனக் கொள்ளி!

பாடியவர்: பெருவழுதி. திணை :

குறிஞ்சி, துறை :

வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழி தலைவிக்குச் சொல்லியது.

[(து-வி.) வரைவுக் காலம் நீட்டித்துக் கொண்டே போகக் களவுறவை விரும்பி வந்து குறியிடத்தே தலைவி பொருட்டாகக் காத்து நிற்கின்றான் தலைவன்.

அவனைக்

கண்ட தோழி, தான் தலைவியை ஆற்றுவித்திருந்த தன்மையை அவனுக்குக் கூறுகின்றாள்]

ஓங்குமலை நாட! ஒழிகநின் வாய்மை! காம்புதலை மணந்த கல்லதர்ச் சிறுநெறி, உறுபகை பேணாது, இரவில் வந்து, இவள் பொறிகிளர் ஆகம் புல்லத் தோள்சேர்பு, அறுகாற் பறவை அளவுஇல மொய்த்தலின் கண்கோள் ஆக நோக்கிப் 'பண்டும்

இனையையோ!'யென வினவினள், யாயே; அதன்எதிர் சொல்லா ளாகி, அல்லாந்து என்முகம் நோக்கி யோளே: 'அன்னாய்!'

"யாங்குஉணர்ந்து உய்குவள்கொல்?" என, மடுத்த

சாந்த ஞெகிழி காட்டி-

ஈங்குஆ யினவால்' என்றிசின் யானே.

5

10

ஓங்கிய மலைகளையுடைய நாட்டிற்கு உரியவனே! நின் வாய்மைகள் எல்லாம் இனி ஒழிவனவாக! மூங்கில்கள் நெருங்கிய கற்பாறை நெறியாகிய சிறு வழியிடத்தே, நின்னை வந்தடையும் மிக்க பகையினைப் பொருட் படுத்தாதே. இரவுப் போதிலே, நீயும் வந்து தலைவியது திருவிளங்கும் மார்பைத் தழுவிச் செல்வாய். அந்த மணத்தை விரும்பியவாய், இவள் தோள்களிடத்தே சார்ந்து, அளவற்ற வண்டினங்கள் ஒரு சமயம் மொய்த்துக் கொண்டன. அதனைக் கண்ட அன்னை, கண்களாற் கொல்வாள்போல வளது மார்பினை நோக்கினாள். 'மகளே! நீ முன்பும் இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/112&oldid=1627234" இலிருந்து மீள்விக்கப்பட்டது