பக்கம்:நற்றிணை 1.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

113


[(து-வி.) தலைவன், குறித்தபடி வரைந்து வராதானாக, தலைவி பெரிதும் மெலிவடைகின்றாள் அவளை ஆற்றுவிக்கும் வகையால், 'அவன் வருவான்' எனத் தோழி வலியுறுத்த, தலைவி தோழிக்குச் சொல்லுவது இது ]

குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ வண்டுதரு நாற்றம் வளிகலந்து ஈயக் கண்களி பெறூஉம் கவின்பெறு காலை எல்வளை ஞெகிழ்த்தோற்கு அல்லல் உறீஇச் சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா ஒருங்குவரல் நசையொடு வருந்தும் கொல்லோ? அருளான் ஆதலின், அழிந்திவண் வந்து, தொல்நலன் இழந்தஎன் பொன்நிறம் நோக்கி, 'ஏதிலாட்டி இவள்' எனப்

போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே?

5

10

தோழி! குறியதாக நிற்கும் குராமரத்தின் சிறிய அரும்பு சுள் முதிர்ந்த நறுமலர்களிலே வண்டுகள் மொய்த்துக் கிளைத்தலாலே எழுந்த நறுமணத்தைக், காற்றுப் புகுந் தடுத்துக் கொணர்ந்து வீசுதலாலே, கண்கள் களிப்பினைப் பெறுகின்ற அழகினைப் பெற்றிருந்த போதிலே, என் ஒள்ளிய வளைகளை நெகிழ்வித்துச் சென்றவரான தலைவரைக் கருதித் துன்பங்கொண்டதாய் என் நெஞ்சம் சென்றது அப்படிச் சென்ற நெஞ்சமானது, அவர் செய்யும் வினைக்குத் தளர்வு ஏற்படாவாறு, அவரோடு ஒருங்கே திரும்பி வருதலான விருப்பத்தோடு, அவ்விடத்திருந்தே வருந்தி யிருக்கின்றதோ! அன்றி, அவர் தாம் அருளாதார் ஆதலினாலே கலங்கியழிந்து இவ்விடத்துக்குத் திரும்பிவந்து நோய் மிகக் கொண்டு அதனாலே பழைய அழகினை இழந்துவிட்ட எனது பொன்னிறமான பசலை நிறத்தைப் பார்த்து, 'இவள் நமக்கு அயலாள் ஆவள்' என முன் தான் கண்டறிந்த என்னைத் தேடியபடியே யாண்டுப் போயிருக் கின்றதோ?

கருத்து : "பிரிந்த அன்றைக்கே என் நெஞ்சமும் அவருடன் சென்றுவிட்டது; யான் என் செய்வேன்?' எனத் தன் ஆராத் துயரத்தைத் தலைவி உணர்த்துகின்றாள் என்ப தாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/114&oldid=1627236" இலிருந்து மீள்விக்கப்பட்டது