பக்கம்:நற்றிணை 1.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் 1. சிறுமை செய்யார் பாடியவர் : கபிலர். திணை : குறிஞ்சி. துறை : பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது. [(துறை விளக்கம்) தலைவன், தலைவியைப் பிரிந்து செல்லும் முயற்சிகளிலே ஈடுபட்டனன். அதனைக் கண்டு. அவன் பிரியின் தலைவிபால் வந்துறும் துன்பப் பெருக் கினுக்கு அஞ்சுகின்றாள் தோழி. அவள், தலைவியிடம் சென்று தன் வருத்தத்தைக் கூறிய பொழுதிலே, தலைவ னிடத்தே ஆராக்காதலும் நம்பிக்கையும் உடையவளான தலைவி, தன் சால்பு தோன்ற உரைத்து, அவளைத் தேற்றுகின்றாள்.] நின்ற சொல்லர்; நீடுதோ றினியர்: என்றும் என்றோள் பிரிபறி யலரே தாமரைத் தண்தா தூதி, மீமிசைச் சந்தின் தொடுத்த தீந்தேன் போலப் புரைய மன்ற புரையோர் கேண்மை; நீரின் றமையா உலகம் போலத் தம்மின் றமையா நந்நயந் தருளி, நறுநுதல் பசத்தல் அஞ்சிச் சிறுமை யுறுபவோ செய்பறி யலரே! வ்வாறு தோழீ! நம் தலைவர் என்றுமே பிறழ்தலற்றதாகி நிலை பெறுகின்ற சொல்வாய்மையினை உடையவர்; நெடிதாகப் பழகுந்தோறும் பின்னரும், பின்னரும் இனிமை உடையவ ராக விளங்குகின்ற தன்மையினை உடையவர்: என் தோள் களைப் பிரிகின்றதான அந்தக் குறைபாட்டுச் செயலினை என்றுமே அறியமாட்டாத சிறந்த பண்பினையும் கொண்ட வர். வண்டானது, தாமரைப் பூவினது தண்மையான தாதினை ஊதிக்கொண்டுசென்று. மிக்க மேலிடத்ததான வைத்திருக்கும் சந்தனமரத்தினிடத்தே இனிதானவொரு போல, மேலான தன்மையாளரான தேனிறாலைப் அவருடைய நட்பானது, என்றும் நமக்கு மேன்மையினைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/12&oldid=1627125" இலிருந்து மீள்விக்கப்பட்டது