பக்கம்:நற்றிணை 1.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

121


சொற்பொருள்: நெற்கூட்டு - நெற்கூடுகளையுடைய. நிவப்பு - உயர்வு மிளிர்வை - ஒளி செய்து விளங்கும் தன்மை. புகர்வை அரிசி - உணவுக்கு உரித்தான அரிசி. சுழும மாந்தல். திகட்டுமளவுக்குத் தின்னல். நடுநர் உழத்தியர். சாய் - கோரைப்புல்.

விளக்கம் : 'விடியலில் உழச்செல்லும் உழவனைக் காணவரும் தோழி, 'கண்படை பெறாது' என்றது, தலைவி யும், தானும் இரவு முற்றவும் கண்படை பெறாதிருந்த வருத்தத்தின் மிகுதிப்பாட்டைக் கூறியதாம். 'சழும மாந்தி நடுநரோடு சேறியாயின்' என்றது. 'அம் மயக்கத்தாலும், நடுநரோடு பேசிக் களிக்கும் இன்ப மயக்கத்தாலும் பேணாது போகாதே, கருத்துடன் சாயும் நெய்தலும் பேணுக என்றதாம். "எம்மில் மாயிருங் கூந்தல் மடந்தை" என்றதால், தலைவி இற்செறிக்கப்பட்டதனையும் உணர்த்தினள். 'உழுங் காலத்து அவற்றைப் பிடுங்கிப் பேணிவைத்திருந்து ல்லிற்குக் கொண்டுவர வேண்டும் என்பது தோழியின் உரையாகும். கோரையை வளையாகக் கையிற்கூட்டுவதும், நெய்தலின் தழையைத் தழையுடையாகக் கொள்வதும் அந்நாள் மருதநில மகளிரது வழக்கமாகும்.

உள்ளுறை

ளுறை: உழத்தியர் ஆக்கிய வராற் கறியோடு சோற்றையுண்டு தொழிற்குச் செல்லும் உழவனைக் கூறியது. அவ்வாறே தலைவியும் தலைவனை மணந்து இல்லத்தலைவியாகத் திகழ்தலிலே நாட்டமிகுந்தனள் என்பதற்காம்.

61. கண்ணும் உறங்குமோ!

பாடியவர்: சிறுமோலிகளார். திணை : குறிஞ்சி. துறை : தலைவன் வரவுணர்ந்து தலைவிக்குச் சொல்லுவா ளாய்த் தோழி சொல்லியது.

[ (து - வி.) தலைவன்

களவுறவை வேட்டுவந்து நிற்பதனை அறிந்தாள் தோழி. தலைவிக்குச் சொல்லுவா ளாகத் தலைவனும் கேட்டு வரைந்து கோடற்கு முனையு மாறு, கூறுவது இது.]

கேளாய் எல்ல தோழி! அல்கல் வேணவா நலிய வெய்ய உயிரா

ஏமான் பிணையின் வருந்தினெ னாகக் துயர்மருங்கு அறிந்தனள் போல அன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/122&oldid=1627244" இலிருந்து மீள்விக்கப்பட்டது