பக்கம்:நற்றிணை 1.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

நற்றிணை தெளிவுரை


அலருரை ஆரவாரத்தைக் கொண்ட நம் ஊரோ, பெரிதும் அறனற்றதாயிற்று. அதனாலே—

புட்கள்வந்து அமரவும், அதனால் ஒடிந்த பூக்கள் உதிர்ந்து கலந்திருக்கும் சேற்றினையுடைய கழிப்பாங்கான இடத்தின் மீதாக ஓடிவரும் பெரிய வார்ப்பிணிப்பையுடைய திரைகள், அலைகள் கொண்டுதரும் கடல் நீராலே கழுவப்படும் தன்மையினையுடைய, அலைமிகுந்த கடல் நாட்டானோடு அமைந்த நம் தொடர்புதானும், அறநினைவு இல்லாதே போயின. அன்னையானவள் கடத்தற்கரிய காவலுள் படுத்துதலினாவே, பாலைநோயினைப் பற்றும்படியாகச் செய்து, இறந்துபோதலைத்தான் கொண்டுவிடும் போலும்!

கருத்து : 'தலைவியின் துயரைத் தீர்ப்பதற்கு, அவளை மணந்து கொள்ளுதலே செயத்தக்கது என்பதாம்.

சொற்பொருள் : உரவு – வலிமை. புலவல் – புலால் நாற்றம். இது கடற்புட்கள் அமர்ந்து புவாலைத் தின்று போதவால் வந்தது. விழவு நாற்றம் – புதுமணப் பொலிவு. கடி – காவல். அள்ளல் – சேறு. இவுனி - குதிரை. புணரி – கடல்.

விளக்கம் : 'உரவுக் கடல் உழந்த பெருவலைப் பரதவர்' தலைவியின் தமராகவே, அவர் அறியின் தலைவற்குப் பெரிதும் 'ஏதமாம் என்பதனைக் கூறினளாம். உனர் அறனின்று, ஆயது, களவுமணமும் அறனொடு பட்டதென்னும் மரபினை நினையாதாய்ப் பழித்துரை பேசி ஆரவாரித்தலால், 'அறனில் அன்னை' என்றது, தலைவனைப் பிரிதலால் தலைவி இறந்துபடுவாள் என்பதனை அறிந்தும், தன் குடும்பப் பெருமை நோக்கி அவளைக் காவற்படுத்தியதனால்.

உள்ளுதை : 'கழியது கருஞ்சேற்று வழியே செல்லும் குதிரைகள்மேற் படிகின்ற சேற்றினை, அவைதரு கடல்நீர் சழுவிச் செல்லும் சேர்ப்பன்' என்றது, 'அவன் உறவினாலே தலைவிபால் வந்துற்ற பழியினை, அவனை வரைத்து கோடலின் மூலமாசு அவணே தீர்த்தல் வேண்டும்' என்பதாம்.

இறைச்சி : 'மிகுமீன் உணக்குதலால் எழுகின்ற புலவு நாற்றத்தைப் புன்னையின் புதுமலரிடத்திலிருந்து எழுகின்ற புதுமணம் போக்கும்' என்றது. களவுறவினாலே ஏற்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/127&oldid=1677461" இலிருந்து மீள்விக்கப்பட்டது