பக்கம்:நற்றிணை 1.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

நற்றிணை தெளிவுரை


ஆடையினை உடுப்பவர், மலைக்கண் வாழும் குறவர்கள். அவர்கள், தம் அறியாமையாலே சிறியிலைச் சந்தனமரத்தினை ஒருபுறத்தே வெட்டிவிடுவர். அதனால், அம்மரம் வாடிப் போதலைத் தொடங்கும். மிகவும் கேடடைந்ததாய் மெல்லென வறிதாகுமாறு சோர்வுற்று. முடிவிலே மரமே பட்டுப் போய்விடும். அவ்வாறே என் அறிவும் உள்ளமும் அவரிடத்தே சென்று ஒழிந்தனவாதலினாலே, என் உடம்பும் உயிராற்றவற்றதாய் வறிதாயிற்று. இனி, அவர் நம்பால் அருளுற்று வந்தனராயினும், நம் நோய்க்குரிய மருந்தாக ஆகமாட்டார். அதனால், வாராது அவ்விடத்தராகவே அவர் ஆவாராக! இவ்விடத்தே, நம் காமமும் அதளாலுண்டாகிய நினைவும் நம்மைப்பற்றி வருத்துதலினாவே, வருத்தமிகுந்த நோய்மிக்க நம் வருத்தப்பாட்டினை, நம் சுற்றத்தாரும் காணாது போவாராகுக!

கருத்து : 'இனி, இறப்பொன்றே எனக்கு உரியதாகும்' என்பதாகும்.

சொற்பொருள் : இனைதல் – வருந்துதல். எவன் – என்னபயனோ? ஆரமுருக்கி – மிகவும் கெடுத்து; கெடுதல் – அறுவாய் வழியே அதன் சாரமனைத்தும் வடித்துபோய்க் கெடுதல்.

விளக்கம் : 'என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக' என்ற சொற்கள் வேதனைப் பெருக்கத்தின் வெளிப்பாடாகும். 'யாம் இன்னமாகத் துறந்தோர் நட்பு எவன்?' என்பது, அந்த வேதனை மிகுதியோடு அவனோடு நட்புச் செய்ததன் அறியாமையை நினைத்துங் கூறியதாகும். 'நோயும் முற்றி இறந்து படுவதொன்றையே வேண்டிருந்த நிலையினள்" என்பாள், 'வரினும் நோய் மருந்து அல்வர்' என்கின்றாள். அறிவு அவன்பாற் சென்றமையின் ஆராய்ந்து தெளிவுறும் ஆற்றலை இழந்தாள்; உள்ளமும் அவன்வயிற் சென்றமையின் அதுவும் தனக்குத் துணையில்லாத நிலையினள் ஆயினாள்; இனிச் சாவொன்றே அவளாற் கருதத்தக்கது என்பதாகும்.

உள்ளுறை : அறியாமையினாலே குறவர் அனுப்பினும் அந்த அறுப்பின் காரணமாகத் தன்னுடைய ஜீவசத்தியை முற்றவும் இழந்ததாய்ச் சத்தனமரம் பட்டுப்போவதுபோல, பிரிவினால் தலைவிக்குத் துன்பம் நேரும் என்பதை அறியாதேயே தலைவன் பிரித்தனனாயிலும், அந்தப் பிரிவாகிய துயரத்தால் அவள் நாளுக்குநாள் நலிவுற்று முற்றவும் வாட்ட முற்றனன் என்று கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/129&oldid=1678100" இலிருந்து மீள்விக்கப்பட்டது