பக்கம்:நற்றிணை 1.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

நற்றிணை தெளிவுரை


தருவதாகவே விளங்கும். நீர் வளத்தினை இல்லாதே அமைந்திராத இந்தப் பூமியினது இயல்பினைப் போலவே, தம்மை இல்லாதே அமைந்திராத தன்மையினைப் பெற்றுள்ள நம்மையும் விரும்பி, நமக்கு அந்நாளில் அருளி னையும் செய்தவர் அவர். நம்முடைய நறுமணம் கமழ் தலையுடைய நெற்றியானது பசலையாலே உண்ணப்பட்டுப் பாழாதலை நினைத்து, அச்சங் கொண்டவர் ஆகுதலாகிய ஒரு சிறுமையினையும், அவர் அடைபவர் ஆவோரோ? அடையார்காண்! . கருத்து: சிறுமையினை அறியார்; ஆதலின் பிரிதலை யும் நினையார்' என்பதாம். சொற்பொருள்: நின்றசொல் - நிலைபெற்ற சொல்; மாறாத சொல்வாய்மை. 'நீடுதோறு' என்றது, உறவுக் காலத்தின் நெடுமையைக் குறித்தது. புரைமை - உயர்ச்சி. நீர் - நீர்வளம். விளக்கம் : 'நின்ற சொல்லர்' என்றதுடன், நீடுதோறு இனியர்' என்றும் சொன்னது, வாய்மை தவறாதவர் மட்டு மன்றி, ஆராப்பெருங் காதலன்பையும் உடையவர் காதலர் என்பதற்காம். தோழி அதனை உணர்தல் இயலாமையால், தலைவி அவளுக்கு உரைத்துக் காட்டுகின்றாள். தாமரைத் தாது தலைவிக்கும், சந்தனமரம் தலைவனுக்கும், தாமரைத் தாதினை ஊதிச்சாந்தில் இறாலை வைத்த வண்டு ஊழிற்கு மாகப் பொருத்திக் காணுதற்கு உரியன. நல்லூழின் செய லாலேயே தான் தலைவனோடு கலந்து இன்புறுதற்கு உயர்வுபெற்று விளங்குதலான செவ்வி வாய்த்தது; அஃது என்றும் தன்னைக் கைவிடாது பேணி நிற்கும் என்பதுமாம். அவனது பெருங்காதலை நினைந்து உவகைகொண்டு, அவன் பிரியினும், அவனது பேரன்பின் வயத்தளாகிய தான், அவன் மீண்டு வரும் வரைக்கும் பொறுத்து ஆற்றியிருக்கும் கற்பினை உடையவள் என்பதனைத் தோழிக்குத் தலைவி இவ்வாறு நுட்பமாக உணர்த்துகின்றாள். . இடியினும் கொடியதாகும்? பாடியவர் : பெரும்பதுமனார். திணை : பாலை. துறை: உடன்போகா சொல்லியது. நின்றாரை இடைச்சுரத்துக் கண்டார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/13&oldid=1627135" இலிருந்து மீள்விக்கப்பட்டது