பக்கம்:நற்றிணை 1.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

129


மேற்கோள் : இச்செய்யுளை 'வழிபாடு மறுத்தலின்கண்' தலைவி தோழிக்குத் கூறியதாகக் காட்டுவர் நச்சினார்க்கினியர்– (தோல். பொருள். சூ. 111. உரை மேற்கோள்.) அவ்வாற கொள்வதாயின், பிரிவை நீட்டித்த தலைவன், மீண்டுவந்து தலைவியை வழிபட்டு நின்று அவளது ஊடலைத் தீர்த்துச் கூடுதற்கு முயன்றானாக, அவ்வேளையில் அதனை ஏற்க மறுத்துத் தோழிக்கு உரைப்பாள்போல, அவனுக்கு உரைத்ததாகக் கொள்க.

65. அயலிலாட்டிக்கு அமுதம்!

பாடியவர் : கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : விரிச்சி பெற்றுப் புகன்ற தோழி, தலைமகட்குச் சொல்லியது.

[(து–வி.) குறித்த பருவத்து வந்தருளாத தலைவனது செயலால் பெரிதும் நோயுற்று நலிந்திருந்தாள் ஒரு தலைவி. அவளுக்குத் தான் கேட்ட நற்சொல்லைக் கூறி அவன் விரைவிலே வந்தடைவான் என்று தேற்றுகின்றாள் தோழி]

அமுதம் உண்க, நம் அயல்இ லாட்டி
கிடங்கில் அன்ன இட்டுக்கரைக் கான்யாற்றுக்
கலங்கும் பாசி நீர்அலைக் கலாவ
ஒளிறுவெள் அருவி ஒண்துறை மடுத்துப்
புலியொடு பொருத புண்கூர் யானை 5
நற்கோடு நயந்த அன்புஇல் கானவர்
விற்கழிப் பட்ட நாமப் பூசல்
உருமிடைக் கடிஇடி கரையும்
பெருமலை நாடனை 'வரூஉம்'என் றோளே.

அகழியைப் போன்றதாக இருசாரும் கரையமையப் பெற்று விளங்குகின்ற காட்டாற்றின் கண்ணே, கலங்கும் பாசியை நீரின் அலைகள் அலைத்தவாலே, அது எங்கும் பரவிக்கிடக்கும். ஒள்ளிய வெள்ளருவியையுடைய, ஒளி கொண்ட நீர்த்துறையிடத்தே பாய்ந்து, புலியோடு போரிட்டது ஒரு யானை. அதனால் புண்பட்டு நலிந்த அந்த யானையின் நல்ல கொம்புகளைப் பெற விரும்பிய அன்பற்ற வேட்டுவர்கள், அதன்மேல் அம்புகளை ஏவினார்கள். வில்லினின்றும் புறப்பட்டுக் சென்று தைத்த அம்புகளின் தாக்குதல் காரணமாகச் சுழன்று வீழ்ந்துவிட்ட அந்த யானையினது, அச்சத்தை விளைவிக்கும் அவலக்குரலானது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/130&oldid=1678101" இலிருந்து மீள்விக்கப்பட்டது