பக்கம்:நற்றிணை 1.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

நற்றிணை தெளிவுரை


இறைச்சி : 'மன்றத்து எருமைகளுள் பாற்பயனுடைய கார் ஆனிடத்துப் பாற்பயனைக் கொண்டு ஊர்மக்கள் இன்புறுதல் போல, ஆயமகளிர் கூட்டத்துள் வந்த தலைவியின் காதற்பயனைப் பெற்று இன்புறத் தலைவலும் விரும்பினான்' என்க. ஊர்க் குறுமாக்கள் பாற்பயனை அளித்தபின் அதனையும் பிற எருமைகளைப்போல மேய்ச்சற்குக்கொண்டு செல்வதுபோன்று, தோழியும் தனக்குத் தலைவியை இன்புறக் கூட்டியபின். இல்லிற்குத் தம்முடன் அழைத்தேக வேண்டும்' என்று கூறுகின்றானும் ஆம்.

81. நகை காண்போம்?

பாடியவர் : அகம்பன் மாலாதனார்.
திணை : முல்லை.
துறை : வினைமுற்றிய தலைவன், தேர்ப்பாகற்கு உரைத்தது.

[(து–வி.) அரசவினைப் பொருட்டாகத் தலைவியைப் பிரிந்த தலைவன், தான் கார்காலத்துத் திரும்புவதாக உறுதி கூறிச் சென்றிருந்தான். வினை முடிந்தபின், கார்ப் பருவத்தின் தோற்றத்தைக் கண்டதும், அவள் தன் தேர்ப்பாகனிடம் இவ்வாறு உரைப்பானாகத் தேரைப்பூட்டி விரையச் செலுத்துமாறு அவனை ஏவுகின்றாள்.]

இருநிலங் குறையக் கொட்டிப் பரிந்தின்று
ஆதி போகிய அசைவுஇல் நோன்தாள்
மன்னர் மதிக்கும் மாண்வினைப் புரவி
கொய்ம்மயிர் எருத்தில் பெய்ம்மணி ஆர்ப்பப்
பூண்கதில் பாக! நின் தேரே; பூண்தாழ் 5
ஆக வளமுலைக் கரைவலம் தெறிப்ப
அழுதனள் உறையும் அம்மா அரிவை
விருந்துஅயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய
முறுவல் இன்நகை காண்கம்!—
உறுபகை தணித்தனன்! உரவுவான் வேந்தே. 10

பாகனே! வலிய வாளினைக் கொண்டோனான நம் வேந்தனும், நம்பால் வந்தடைந்த பகையினைத் தணித்து விட்டனன். பெரிதான நிலப்பரப்புக் குழியும்படியாகக் கொட்டி விரைய நடந்து போகும். ஆதிகதியிலே செல்லுதனைக் கொண்ட, தளர்வற்ற வலிய கால்களையுடைய, மன்னரும் மதிக்கும் மாட்சிமிக்க நடைத்தொழிலைக் கொண்டவான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/161&oldid=1681242" இலிருந்து மீள்விக்கப்பட்டது