பக்கம்:நற்றிணை 1.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

நற்றிணை தெளிவுரை


விளக்கம் : உள்ளினேன் அல்லனோ?" என்றது, தன் மனம் அவ்விடத்தே பொருளின்பாற் செல்லாதாய்த் தன் மனையின் கண்ணேயே சென்றபடி துயருற்றது என்பதாம். அதனாற் பிரிவைத் தன்னாலேயும் பொறுத்தற்கு இயலாது என்பதுமாம். இதனால், அவன் தன் போக்கைக் கை விட்டனனாதலும் விளங்கும். பட்ட இறைச்சி : பொரியரை வேம்பினது உயரிய கிளை யிடத்தே ஈன்பருந்து இருந்து வருந்தியிருக்க, அதன் புள்ளி நிழலிடத்தே கல்லாச் சிறாஅர் வட்டாடியபடி இன்புற்றிருக்கின்றனர். அவ்வாறே, தன். தலைவி புதல் வனைப் பெற்ற வாலாமைநாள் தீராதாளாய் நலிந் திருக்கத், தன் மனம் அவனைப்பற்றி ஏதும் நினையாதே, தன்னைப் பொருள் நினைவிலே கொண்டு செலுத்துகின்றது எனத் தலைவன் அதனிடத்தே கூறியபடி நோகின்றனன் என்று கொள்ளுக. 4. கொண்டு செல்வாரோ? பாடியவர்: அம்மூவனார். திணை : நெய்தல். துறை: தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி அவரச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது. நச்சினார்க்கினியர் இதனைத் தலைவி கூற்றாகக் கொண்டுள்ளனர் (தொல். பொ. 113 உரை). அதனை யொட்டி நாமும் பொருள் கொள்ளலாம். [(து-வி.) களவுறவிலே திளைத்துவரும் நங்கை யொருத்தி,ஊரிடத்தே எழுந்த பழிச்சொற்களைக் கேட்டு அச்சமுற்றுத், தலைவன் தன்னை விரையவந்து மணந்து கொள்ளல் வேண்டுமெனக் கருதினாள். அதனைத் தலை வனிடம் நேரிற் கூறுதற்கு நாணியவளாக, அவன் குறியிடத்தே சிறைப்புறத்தானாதலை அறிந்து, அவன் கேட்குமாறு, தான் தோழியிடம் உரையாடி உசாவுவாள் போல இவ்வாறு உரைக்கின்றாள்.] கானலம் சிறுகுடிக் கடன்மேம் பரதவன் நீல்நிறப் புன்னைக் கொழுநிழல் அசைஇத் தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி அந்தண் அரில்வலை உணக்கும் துறைவனொடு

  • அலரே அன்னை அறியின் இவணுறை வாழ்க்கை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/17&oldid=1627139" இலிருந்து மீள்விக்கப்பட்டது