பக்கம்:நற்றிணை 1.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

185


வெற்பும் பிரிந்தோர் இரங்கும் வளமுடைத்தாதல்' என்ன அறமோ? என்று கேட்பாள், 'பிரித்தோர் இரங்கும் பெருங்கல் நாட!' என்றாள் 'நாண் அடுதல்' களவுறவைப் பிறாறியின் பழிப்பரெனப் பிரிவுத் துயரத்தை உள்ளடக்கியே மறைத்து ஒழுகுமாறு வற்புறுத்தல். ஆதனால் களவு, வெளிப்படுதல் இல்லை எனினும், 'பூண் தாழ் ஆகம்' பழங்கண் மாமையினை உடைத்தாதலினின்றும் தப்பிற்றில்லை' என்பதாம்.

94. என்ன ஆண்மகனோ?

பாடியவர் : இளந்திரையனார்.
திணை : நெய்தல்
துறை : தலைமகன் சிறைப்புறமாகத் தலைவி தோழிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.

[(து–வி) தலைவன், தன் பேரன்பையுணர்ந்து, பிரியாத இல்லற வாழ்விலே செலுத்தும் மணவுறவினை நாடானாயிருத்தலை நினைந்து, வருந்துகின்றாள் தலைவி. அவள், தன் துன்பம் புலப்படத் தோழிக்குக் கூறுவாள்போலச் சிறைப்புறமாக வந்து நிற்கும் தலைவனும் கேட்டறியுமாறு கூறுகின்றாள்.]

நோய்அலைக் கலங்கிய மதன்அழி பொழுதில்,
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;
யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கிக்
கைவல் கம்மியன் கவின்பெறக் கழாஅ
மண்ணாப் பசுமுத்து ஏய்ப்பக் குவிஇணர்ப் 5
புன்னை அரும்பிய புலவுநீர்ச் சேர்ப்பன்
என்னை மகன்கொல் தோழி! தன்வயின்
ஆர்வம் உடையர் ஆகி,
மார்புஅணங் குறுநரை அறியா தோனே?

தோழி! காயநோயானது பற்றியலைப்பக் கலங்கியதான வலியழிந்த பொழுதிலே, தான் கொண்ட காமநோயை எடுத்துச் சொல்லி, அதற்கு ஒரு வழியைக் கண்டறிதல் என்பது ஆண்மகனுக்குப் பொருந்துவதாகும். யானோ, என்னிடத்துள்ள பண்பு தடுத்தலினாலே, யான் கொண்ட காமநோயினை வெளிப்படுத்தாதவாறு, நுண்ணியதாகத் தாங்கியிருந்தே நலிகின்றேன். தன்னிடத்தே பேரன்பினை உடையவராகித், தன் மார்பினைத் தழுவுதலையே விரும்பின-

ந.—12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/186&oldid=1685977" இலிருந்து மீள்விக்கப்பட்டது