பக்கம்:நற்றிணை 1.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

19


நிலம் நீரினாலே நிரம்பப்பெற்றதாய் நிறைவெய்தவும், குன்றிடத்து மரம் முதலாயினவெல்லாம் தழைப்பவும். அசுன் ற வாயினையுடைய பசிய சுனையிடத்தெல்லாம் அதன்கண் தோன்றும் பயிர்வகைகள் முளைத்தெழுந்து வளர்ந்து நிறையவும், கொல்லையிடத்தே குறவர்கள் வெட்டியழித்தலினாலே குறைபட்ட மிக்க நறைக் கொடியானது நறுமணமுடைய வயிரங்கொண்ட சந்தன மரத்தின்மீது சுற்றிப் படர்ந்து ஏறவும், பெருமழையைப் பொழிந்த தொழிலையுடைய மேகமானது தென்திசை யிடத்தே எழுந்து செல்லுதலினாலே, காதலரைப் பிரிந்தோர் இரங்குகின்றதான முன்பனிக்காலத்திலும், நின் காதலரை நீ பிரிந்து தனித்து வாழ்தல் என்பதுதான் அரிதாகும். கருத்து: 'ஆதலின், நீ மகிழ்வோடு அவரோடுங்கூடி யின்புற்று வாழ்வாயாக' என்பதாம். சுனைப் பயிர்: சொற்பொருள்: குழைப்ப - தழைப்ப. குளநெல் முதலாயின. கால் யாத்தல் - முளைத்தெழுந்து வளர்தல். நிறைப்பவர் - மணக்கொடி; நன்னாறியின் வேரைப்போலக் கொடி மணக்கும் தாவரவகையினைச் சார்ந்தது. காழ் - வயிரம். ஆரம் - சந்தனமரம். அகைத்தல் படர்ந்து ஏறுதல். அற்சிரம் - முன்பனிக் காலம். விளக்கம் : குறவர். கொன்ற குறைக்கொடி நறைப்பவர், நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்பக், காதலர்ப் பிரிதல் அரிதாய்த் தழுவி இன்புறுக' என்று குறிப்பாகக் கூறுகின்றாள் தோழி. தலைவியின் கவலையால் மெலிந்த உடல். மீண்டும் களிப்பால் பூரித்து. அவள் தலைவனைத் தழுவியின் புறுதலைக் குறிக்கின்றாள் தோழி. அதனை உவமையாற் குறிப்பாகவும் புலப்படுத்து கின்றனள். 6 " 'இவர் யார்?' என்னாள்! பாடியவர் : பரணர். திணை: குறிஞ்சி. துறை: இரவுக் குறிப்பாற்பட்டு ஆற்றானாகிய தலைவன், தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. G ((து-வி.) இரவுக் கால தே தலைவியைக் கூடி மகிழும் வாய்ப்பைப் பெறக் கருதிய தலைவன், தலைவியின் தோழி யைக் கண்டு, தன் நெஞ்சிற்குக் கூறுவானேபோல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/20&oldid=1627142" இலிருந்து மீள்விக்கப்பட்டது