பக்கம்:நற்றிணை 1.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

219


திமில் – மீன்பிடி படகு. திரைச் சுரம் – அலையுடைய கடற்பரப்பாகிய சுரநெறி. கெண்டி நிரம்பப் பற்றிக்கொண்டு. நிணம் – ஊன்: திமிலிடத்துப் போடப்பெற்ற மீன்கள் உயிரற்றுப் போவதனால் 'நிணம்' எனக் குறித்தனர்.

இறைச்சிப் பொருள் : பரதவர் குடிச் சிறுவர் மீன்பிடி படகுகனிற் கடல்மேற் சென்று வேட்டமாடிக் கொணரும் மீன்நிணங்களை இகுமணற் பாங்கிலே குவித்தாற் போலத், தலைவரும் சுரநெறியினைக் கடந்துசென்று தாமீட்டிய பெரும்பொருளைத் தலைவியது தந்தை முன்பாகக் குவித்துத் தலைவியை வரைந்துகொள்வர் என்பதாம்.

விளக்கம் : வேட்டுவச் சிறுவர் மரங்களினடியில் மான்கட்காக வலைவிரித்து வைத்தாராய், மான்கள் வந்துவிழும் செவ்விநோக்கி மரங்களின்மேற் சென்றமர்ந்து காத்திருப்பர். இவ்வாறே படகுகளிற் சென்று வலைவிரித்துப் படும் மீன்தொகுதிகளை நோக்கிக் காத்திருப்பர் பரதவர் சிறுவர். இருசாராரும் குறித்த வேட்டம் வாய்த்ததும், இல்லத்தினை நாடித் திரும்புவர். இவ்வாறே வரைபொருளினை நாடிப் பிரிந்த தலைவனும் அதனைத் தேடிக்கொண்டதும் திரும்பிவிடுவான் எனபதாம். 'தேர், பாக்கம் கல்லென வரும்' என்றது. அதனால் வரும் அலருரைகளை அவன் கருதமாட்டான் எனவுணர்த்தி, அவனது வரவு வரைவினைவேட்டு வருதலாக அமையும் என்று காட்டுவதாம். வாள்வாய்ச் சுறா – வான்போல் எதிர்த்தாரை வெட்டி அழிக்கவல்ல உருப்பினை வாயிடத்துப் பெற்றிருக்கின்ற சுறாமீன். வேட்டமாடுவோர் வேட்டைப் பொருட்டு நேரும் உயிர் இழப்பினைக் கருதாராய்த் தாம் அதனாற் பெறுகின்ற பயனையே கருதுமாறுபோலத், தலைவரும் தாம் தலைவியை அடைந்து பெறுகின்ற பயனையே கருதினராய்ப் பொருளீட்டி விரையைத் திரும்புவர் என்றதுமாம்.

112. என்ன விருந்து செய்வோம்?

பாடியவர் : பெருங்குன்றூர் கிழார்.
திணை ; குறிஞ்சி.
துறை : பருவ வரவின்கண் ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

[(து–வி) பிரிந்து போயின தலைவன், தான் மீள்வதாகக் குறித்துச் சென்ற பருவமானது வந்துற்றதும், குறித்தபடி வராதானாயினான். அவனை நினைந்தானாகிய தலைவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/220&oldid=1689906" இலிருந்து மீள்விக்கப்பட்டது