பக்கம்:நற்றிணை 1.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

23


  • வெண்ணெல் அருந்திய வரிநுதல் யானை, தண் நறுஞ்

சிலம்பின் துஞ்சும் சிறியிலைச் சந்தின பெருங்காடு' என்றது. கோடைக்கு முற்பட்ட வளமான காட்டின் தன்மையைச் சுட்டிக் கூறியதாகும். அத்தகைய காடும் வாடியது என்பாள், 'வாடு பெருங்காடு' என்கின்றனள். இறைச்சிகள் : (1) 'வாடிய காட்டை வாழ்விக்க மழை பெயலைத் தொடங்கப் போகின்றது' என்றது, அக்காலத் துச் சொற்பிழையாராய் நின் காதலரும் வந்து நின்னை வாழ்விப்பர் என்பதாம். (2) மூங்கில் நெல்லருந்திய யானை சத்தனக் காட்டிடத்தே கவலையின்றித் துயிலுமாறு போல. நீயும் இன்புற்றனையாய்ச் சாந்தம் கமழும் தலைவனின் மார்பிடத்தே துயில் தலைப் பெறுவாய் என்பதாம். 8. பெற்றவர் வாழ்க! பாடியவர் : திணை : குறிஞ்சி. துறை : இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண், தலைமகளை ஆயத்தோடும் கண்ட தலைமகன் சொல்லியது. [ (து .வி.) இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர்த் தலைவி தலைவனை நீங்கிச் சென்று, தன் ஆயத்தவரோடும் போய்க் கலந்து கொள்ளுகின்றாள். அவளை அவரிடைக் காணும் தலைவனின் உள்ளத்தே. தான் அவளை அடைந்த நல்லூழை நினைத்து எழுகின்ற பெருமித உணர்வு மேலோங்குகின்றது. அவன், தன் நெஞ்சோடும் இவ்வாறு சொல்லுகின்றான்.) அல்குபடர் உழந்த அரிமதர் மழைக்கண் பல்பூம் பகைத்தழை நுடங்கும் அல்குல் திருமணி புரையும் மேனி மடவோள் யார்மகள் கொல்? இவள் தந்தை வாழியர்! துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும் தண்சேறு தாஅய மதனுடை நோன்தாள் கண்போல் நெய்தல் போர்வில் பூக்கும் திண்தேர்ப் பொறையன் தொண்டி தன்றிறம் பெறுக, இவள் ஈன்ற தாயே! 5 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/24&oldid=1627146" இலிருந்து மீள்விக்கப்பட்டது