பக்கம்:நற்றிணை 1.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

249


உள்ளுறை : கழியைத் துழாவி இரைதேடும் நாரை, தன் மேனிப்புறமெல்லாம் நனைந்திருப்பவும், இறவெறிதிவலையாற் பனிக்கும் தன்மைத்தாகும் பாக்கம் என்றாள்; பரத்தையின் இன்பத்தை நாடித்திரியும் தலைவனது புதிய உறவைக் குறித்தெழுந்த பழிச்சொற்கள் பாக்கமெல்லாம் நிறைந்ததாக, அதனைக் கேட்ட யாமும் நடுங்கினேம் என்கின்றாள்.

128. நினைந்த நெஞ்சம்!

பாடியவர் : நற்சேந்தனார்.
திணை : குறிஞ்சி.
துறை : (1) குறைநேர்ந்த தோழி தலைவி குறைநயப்பக் கூறியது. (2) தோழிக்குத் தலைவி அறத்தோடு நின்றது.

[(து–வி) (1) தலைவனுக்குத் தலைவியை இசைவிக்கச் செய்வதற்கு உதவுவதாக வாக்களித்த தோழி, தலைவிபால் வந்து, அவள் மனம் தலைவன்பாற் செல்லுமாறு கூறுவது; (2) வேற்று வரைவுக்கு அஞ்சினளான தலைவி, தன் களவினைத் தோழிக்குப் புலப்படுத்தித் தனக்கு உதவுமாறு கேட்டல்.]

'பகல்எரி சுடரின் மேனி சாயவும் பாம்புஊர் மதியின் நுதல்ஒளி கரப்பவும் எனக்குநீ உரையா யாயினை; நினக்குயான் உயிர்பகுத் தன்ன மாண்பினேன் ஆகலின் அதுகண் டிசினால் யானே என்றுநனி 5 அழுதல் ஆன்றிசின் ஆயிழை! ஒலிகுரல் ஏனல் காவலி னிடையுற்று ஒருவன் கண்ணியன், கழலன், தாரன், தண்ணெனச் சிறுபுறம் கவையின னாக, அதற்கொண்டு அஃதே நினைந்த நெஞ்சமொடு 10 இஃதுஆ கின்று, யான் உற்ற நோயே,

"ஆராய்ந்து அணிந்த அணிகளை உடையாய்! பகற்போதிலே எரிகின்ற சுடர்விளக்கின் ஒளியானது குன்றிக் காணுமாறு போல நின் மேனியின் ஒளியும் இதுபோது ஒளி குறைந்தது. பாம்பினாலே கவ்விக்கொள்ளப்பட்ட மதியினது தன்மைபோலப் பசலையாற் கொள்ளப்பெற்ற நின் நெற்றியது ஒளியும் மறைந்தது. ஆயினும், எனக்கு நீ அதன்

ந.—16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/250&oldid=1692333" இலிருந்து மீள்விக்கப்பட்டது