பக்கம்:நற்றிணை 1.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

நற்றிணை தெளிவுரை


சொற்பொருள்: அண்ணாத்தல் - நிமிர்ந்து மேனோக்கு தல். வனம் - அழகு. மணி - நீல மணி. கடுங்கள் கடுப்பு ஏறிய கள். " - விளக்கம்: 'தளரினும் முடிப்பினும்' என்றதன்கண் தந்து சிறப்பிக்கும் உம்மையினைக் கவனிக்கவேண்டும். என்றும் இளமை குன்றாதாளாய் இவள் விளங்குவாளாக' என்ற வாழ்த்தோடு, 'ஒருக்கால் தளரினும் முடிப்பினும் வளை நீத்தல் ஓம்புமதி என்றும் உரைப் பாளாகவே கொள்ளுதல்வேண்டும். "போஒர்ப் பழையனின் வேல் வாய்த்தன்ன நின் பிழையா நன்மொழி' என்றது, குறித்த கொள்கையினை முற்றவும் நிறைவேற்றும் அவ் வேற்படை போன்று, நீயும் சொன்ன சொற்களை வாய்மை யாக்குக' என்பதாம். 'நன் மொழி' என்றது. 'நின்னிற் பிரியேன்' என்றாற்போலக் கூறிய சொற்கள். 'தேறிய அவள்" என்றது, 'இவன் தன்னை மறந்து மற்றொருத்தி நாடிச் செல்வானோ' என அஞ்சிய அவள், அந்த நன்மொழி களால் தெளிவுற்று, அவனது காதலன்பை ஏற்றனள் ஆதலால். 'பூக் கேழ் ஊரனாதலின், மலருக்கு மலர் சென்று களிக்கும் வண்டினத்தை ஒப்பானாகிவிடாதும், புது மலரை அணிந்தும் பிற்றைநாளில் அதனைக் களைந்து ஒதுக்கிவிட்டு வேறொன்றை நாடிச் செல்லும் தன்மைக்கு உள்ளாகியோனாகாதும், தலைவியைத் தளரினும் மூப் பினும் தாங்கிக் காததல் வேண்டும் என்று கூறுகின்றாளா கவும் கொள்க. யை மேற்கோள் : தொல் பொருள் 39ஆம் சூத்திர உரை யிடத்து, இத் துறைக்கே மேற்கோளாக இச் செய்யுளை நச்சினார்க்கினியர் காட்டுவர். 11. நிலவு விரிந்தது! பாடியவர்: உலோச்சனார். திணை : நெய்தல். துறை: காப்பு மிகுதிக்கண், இடையீடுபட்டு ஆற்றாளாய தலை மகட்கு, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது. ருக் [(து-வி.) தலைவனோடு தலைவி இரவுக்குறியிற் கூடி மகிழ்ந்து இன்புற்று வருகின்ற ஒழுக்கத்தனளாக கின்றாள். அந்த ஒழுக்க நிலையை நீட்டிக்கவிடாது. அவளை வரைந்துவரும் நற்செயலிடத்தே தலைவனைச் செலுத்தல் வேண்டு மென்று நி னைக்கின்றாள் தோழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/29&oldid=1627151" இலிருந்து மீள்விக்கப்பட்டது