பக்கம்:நற்றிணை 1.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

289


இதனைக் கேட்கும் தலைவன், இனித் தலைவியை முறையாக மணந்துகொள்ளுதலே செயத்தகுந்த தென்று கொள்வான்; அதனால் விரைவில் மணவினைக்கும் முயல்வான் என்றறிக. தோழி, தலைவிக்குக் கூறுவாள் போலத் தலைவனும் கேட்டுணருமாறு இங்ஙனம் கூறினள் என்றும் கொள்ளுக.

மேற்கோள் : 'இச் செய்யுள் அலர் அச்சம் நீங்கினமை கூறியது' எனக் (அகத். 42) காட்டித் தலைவி கூற்றாகக் கொள்வர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். தலைவர், தேர் முதலியவற்றை ஏறிச்சென்று தலைவியரைக் கூடுதற்கும் உரியரெனப் புலவர் கூறுதற்கும் மேற்கோளாகக், 'கடுமான் பரிசுடைஇ, நடுநாள் வரூஉம்' என்பதனையும் அவர் காட்டுவர்.

ஆசிரியர் இளம்பூரணனார், 'உடன்போக்கு ஒருப்பட்டதற்குச்' செய்யுளாகக் காட்டுவர் (தொல். அகத். சூ. 45 உரை). பொருளியலுள், 'போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும் என்பதற்கு உதாரணமாகவும் காட்டுவர். அலர் மிகாமைக் கூறும் கூற்றினும் கற்புக்கடம் பூண்டு கூறுதலுக்கு, 'நடுநாள் வருஉம்....... 'அழுங்கலூரே' என்ற பகுதியையும் இவர் காட்டுவர்.

பிற பாடங்கள் : சிறுகோல் வலத்தள் அன்னை; 'கடுமான் பரிய கதழ்பரி கடைஇ'; 'புதுமலர் தீண்டிய பூண்நாறு குரூஉச் சுவல்.'

150. தாயின் சினம்!

பாடியவர் : கடுவன் இளமள்ளனார்.
திணை : மருதம்.
துறை : தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது...

[(து–வி.) தலைமகன் ஒரு பரத்தையோடு உறவு வைத்திருந்தான். சில காலம் சென்றதும், அவளை மறந்து மற்றொருத்திப்பாற் சென்றான். இதனால். முதற்பரத்தை சினங் கொள்ளலானாள். அதனைத் தணிவிக்கக் கருதிய தலைவன், பாணனை அவள்பாற் செல்லுமாறு பணிக்கின்றான். சென்ற பாணனிடம், அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/290&oldid=1693900" இலிருந்து மீள்விக்கப்பட்டது