பக்கம்:நற்றிணை 1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

29


அதனால், காப்பு மிகுதியாகித் தலைவி தலைவனைச் சந்திப்பதும் இயலாதே போயின ஓர் நாளின் இரவிலே தலைவிக்குக் கூறுவாள் போலத், தலைவனும் கேட்டுத் தளியுமாறு இவ்வாறு கூறுகின்றாள்.] பெய்யாது வைகிய கோதை போல மெய்சா யினை அவர் செய் தறி பிழைப்ப; உள்ளி நொதுமலர் நேர்புரை தெள்ளிதின் வாரார் என்னும் புலவி யுட்கொளல் ஒழிக மாளநின் நெஞ்சத் தானே; புணரி பொருத பூமணல் அடைகரை ஆழி மருங்கின் அலவன் ஓம்பி வலவன் வள்பாய்ந்து ஊர 5 நிலவு விரிந்தன்றாற் கான லானே. தோழி! அவர் செய்த இடையீடுபட்டதாய்த் தவறிப் போதலினாலே, சூடாது கிடந்தவொரு பூமாலை யினைப் போல, நின் மெய்யும் வாட்டமுற்ற தன்மையளாக நீயும் ஆயினை. அயலாக எழுகின்ற அம்பலுரைகளைக் கருதினாயாக. 'இனித் திண்ணமாக, அவர் வரமாட்டார்" என்னும் புலவியை நீயும் உட்கொள்ளாதிருப்பாயாக. நின் நெஞ்சத்தே எழும் அந்த நினைவையே ஒழிப்பாயாக. அலை கள் வந்து பொருந்திய பொடிமணல் செறிந்திருக்கும் கடற் கரையினிடத்தே, தான் ஊர்ந்துவருகின்ற தேரின் சக்கரத் திடத்தே பட்டுச் சாவடையாவாறு நண்டுகளையும் விலக்கிய வனாகப், பாகன் வாரைப்பிடித்து ஆய்ந்தபடியே தேரைச் செலுத்துமாறு, கானலிடத்தே நிலவொளியும் பரந்துள்ளது. அதனையும் காண்பாயாக. கருத்து: 'இவற்றைக் கேட்டலுறும் தலைமகன், வரைந்து மணந்து கொண்டாலன்றித் தலைவியை அடைய வியலாது என்பதனை உணர்வான்' என்பதாம். - சொற்பொருள்: சாயினை வாடினை. கோதை பூமாலை. உள்ளி - நினைந்து. நொதுமலர் அயலார். அடைகரை - கடலையடுத்த கடற்கரைப் பகுதி. வள்பு- வார். விளக்கம்: கோதை மணமுடைத்தேனும் சூடி நுகர்ப வரைப் பெறாவிட்டால். வாடி அழகழிந்து போகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/30&oldid=1627152" இலிருந்து மீள்விக்கப்பட்டது