பக்கம்:நற்றிணை 1.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நற்றிணை தெளிவுரை அவ்வாறே தலைவியும், அவனை அடையாதே போய் வாடி உடலிழைத்தனள் என்கின்றாள். அலரறிவுறுத்தியும், காப்பு மிகுதி உரைத்தும், செய்குறி பிழைக்க நேர்ந்ததைச் சொல்லித் தலைவியைச் சமாதானப் படுத்துவதுபோலத் தோற்றினும், தலைவன் இவற்றை அறிந்து தலைவியை முறையாக வரைந்து வந்து மணந்து கொள்ளுதலே தக்க தன்று உரைப்பதே கருத்தாகக் கொள்ளுக. நிலவு வெளிப் பட்டதனால், தாம் வீட்டினின்றும் புறம்போதல் இயலாது என்பதும், ஆழி மருங்கின் வலவனையும் ஒம்புதற்கு ஏற்ற நிலவாதலின், அவன் வரவைச் சேரியினர் எளிதாக அறிந்து கொள்ள, அதனாற் பழியுரைகளே மிகுதிப்படும் என்பதும் குறிப்பாக உணர்த்தினாள். நண்டினையும் காக்கும் கருணை கொண்டவன், தலைவியின் துயரையும் போக்குவானாகி, அவளை விரைய வந்து மணந்துகொள்ளுதலில் மனத்தைக் செலுத்துதல் வேண்டும் என்றதும் ஆம். 12. கண் கலங்கின! பாடியவர் : கயமனார். திணை : பாலை. தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது. துறை (து-வி.) தலைமகள், தலைமகனோடு உடன் போக்கிற் சென்றுவிடுவதற்கு முடிவு செய்கின்றாள். அவனும் அழைத்தேக இசைகின்றான். அவ்வேளை, தோழி, உடன் போக்கினைத் தடுத்துத் தலைவன்பால் இவ்வாறு உரைத்து மணவினைக்குத் தூண்டுகின்றாள்.] விளம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப் பாசம் தின்ற தேய்கால் மத்தம் நெய்தெரி யியக்கம் வெளில்முதன் முழங்கும் வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கால் அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண் வரிபுனை பந்தொடு வை இய செல்வோள் இவை காண்தோறும் நோவார் மாதோ அளியரோ அளியர் என் ஆயத்தோர்!' என நும்மொடு வரவுதான் அயரவும் 5

தன்வரைத் தன்றியும் கலுழ்ந்தன கண்ணே. 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/31&oldid=1626528" இலிருந்து மீள்விக்கப்பட்டது