பக்கம்:நற்றிணை 1.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

317


[(து–வி.) (1) தலைவன் வரைவு நீட்டித்தலான் வேற்று வரைவு வந்துறும் நிலைமை எழுகின்றது. அதுகாலைத் தோழி, தலைவிக்குத் 'தாயிடம் தன் காதலை உரைத்து அறத்தொடு நிற்குமாறு சொல்க' என அறிவுறுத்துவதாக அமைந்தது இது. (2) தலைவன் வரைவொடு வந்தமை தலைவிக்குக் கூறி, அதனை அவள் இல்லத்தார் ஏற்குமாற்றால் அறத்தொடு நிற்குமாறு தோழி வற்புறுத்துவதாக அமைந்ததும் ஆம்.]

அமர்க்கண் ஆமான் அருநிறம் முள்காது
பணைத்த பகழிப் போக்குநினைந்து கானவன்
'அணங்கொடு நின்றது மாலைவான் கொள்க' எனக்
கடவுள் ஓங்குவரை பேண்மார் வேட்டுஎழுந்து
கிளையொடு மகிழும் குன்ற நாடன் 5
அடைதரும் தோறும் அருமைதனக்கு உரைப்ப
'நப்புணர்வு இல்லா நயன்இலோர் நட்பு
அன்ன ஆகுக' என்னான்
ஒல்காது ஒழிமிகப் பல்கின தூதே.

தோழி! அமர்த்த கண்களை உடைய ஆமானினது அரிய நெஞ்சிடத்தே பாய்ந்தும் அதனை வீழ்த்தாதாய்க் குறிபிழைத்துத், தான் விடுத்த அம்பானது ஒதுங்கிப் போயினதைக் கானவன் நினைந்தான். 'இம் மலைப்பக்கம் தெய்வத்தால் கவியப்பெற்று நின்றது போலும்' எனத் கருதினான் 'மலைப்பக்கம் மழைப்பொழிவைக் கொள்வதாக' எனக் கடவுளை வேண்டுவதற்கும் முற்பட்டான். தன் சுற்றத்தோடும் கடவுளை வேட்டற்கு விருப்புற்றும் புறப்பட்டான். உயர்ந்த மலைப்பக்கத்தே கோயில் கொண்டிருக்கும் கடவுளாகிய முருகவேளுக்குப் படையலிட்டும் போற்றினான். அதன் பின்னர்த் தன் அம்பு இனிப் பிழையாதெனவும் மகிழ்ந்தான். அந் நன்மை கொண்ட மலைநாட்டிற்கு உரியவன் நம் தலைவன். அவன்தான் நின்னை நாடிவந்து அடையுந்தோறும், நின்னுடைய அருமைப் பாட்டினை அவனுக்கு எடுத்து உரைத்து அவனைப் போக்கினேன். 'நம்மோடு கூடுதல் இல்லாதாரான தன்மைப் பாட்டினை இல்லாதாரது நட்பும் அவ்வாறே கழிந்து போவதாக' என்று, அவன் நின்னை ஒதுக்கினான் அல்லன். நின்பால் பேரன்பினன் ஆதலின் நின்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/318&oldid=1696090" இலிருந்து மீள்விக்கப்பட்டது