பக்கம்:நற்றிணை 1.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

31


81 நிறைசூல் கொண்ட மகளிரது வயிற்றைப் போலத் தோன்றுவதும், விளாம்பழத்தின் மணம் கமழ்ந்துகொண் டிருப்பதுமான தயிர்த்தாழியில், கயிறு ஆடுதலானே தேய்வு கொண்ட தண்டினையுடைய மத்தினையிட்டு வெண்ணெய் தோன்றக் கடைதலால், தறியடியினின்றும் முழக்கம் எழுந்து கொண்டிருக்கின்ற தன்மையினையுடையது. இரவு முற்றவும் தங்கியிருந்த இருள் தீர்கின்றதான விடியற்காலம். அப் பொழுதிலே. தன் மெய்யினைப் பிறர் காணாவாறு மறைத்துக்கொண்டு, தன் காலிடத்தே அணிந்துள்ள பருக்கைக் கற்களிடப்பெற்ற சிலம்புகளைக் கழற்றினாள். பலவாக மாட்சிமைப்பட்ட வரிகளால் புனையப்பட்டுள்ள தன் பந்தினோ, அதனை ஓரிடத்தே வைப்பதற்காகவும் சென்றாள். சென்றவள் 'இவற்றைத் காணுந்தோறும் ஆயமகளிர் எல்லாரும் வருந்துவார்களே? அவர்கள் பெரிதும் இரங்கத்தக்கவர் அல்லரோ?' எனக் கருதினாள். அதன் பின், நும்மோடு தான் வருதலை மேற்கொள்ளவும், அவள் கண்கள் தம் அளவுக்கும் அடங்கி நில்லாவாய்க் கலங்கிக் கலுழ்ந்தன. கருத்து 'அவள் போக்குத் தவிர்ந்தாள்; அவளை வரைந்துகோடலே கருதத்தக்கது' என்பதாம். இனி, சொற்பொருள்: கமஞ்சூல் - நிறைசூல். குழிசி - தயிர்ப் பானை; தாழி. பாசம் - கயிறு. நெய் - வெண்ணெய். வெளில் - தயிர்கடைதற்குரிய தூண் நட்டிரு க் கு வெற்றிடம். அரி உள்ளிடுபரல். . - ம் விளக்கம்: ' விளம்பழம் கமழும்' என்பதற்கு, தாழியின் தயிர் நெடி மாறும் பொருட்டாக விளாம்பழத்தை இட வைக்க, அந்த மணம் கமழும் என்றும் கொள்வர். மத்தின் தண்டிலே சுற்றிக் கடைதற்குரிய கயிறு பட்டுப்பட்டு தண்டு தேய்வுற்றதனைப் 'பாசந் தின்ற தேய்கான்' என்றனர். 'நெய் தெரி இயக்கம்' வெண்ணெய் தோன்றும் அளவுக்குக் கடைதல். 'மெய்கரந்து' எனவும், 'சிலம்பு கழீஇ' எனவும் சொன்னது, காவலிருக்கும் தாயர் அறியாமற்படிக்குச் செல்லும் பொருட்டாக, சிலம்பினைக் கழற்றிவிடுதல் மணத்திற்கு முற்படச் செய்யவேண்டியெ தொரு சடங் காதலின், தான் உடன்போக்கிற் செல்லத் துணிபவள் தானே கழற்றி வைத்தனள்' எனவும் கொள்ளலாம். இவ்வளவுக்கும் துணிந்த பின்னர், ஆயத்தோர் நோவர்: அளியர்' என்று போக்குத் தவிர்ந்தாள் என்றது, அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/32&oldid=1627154" இலிருந்து மீள்விக்கப்பட்டது