324
நற்றிணை தெளிவுரை
படுதலை நீ கருதாயோ?' என்பாள், 'நின் நயந்து உறைவி இன்னுயிர் உள்ளாய்' என்றனள். 'அணங்குடை அரவு' என்றது கொடிய நாகப் பாம்புகளை. 'ஆரங்கமழும் மார்பினை' என்றது நறு நாற்றத்தால் நின் வரவை எம் மனைக்காவலர் உணர்வர் என்று கூறியதாம். இரவுக்குறி மறுத்து இதனால் வரைவு வேட்டல் பயனாக ஆயிற்று
உள்ளுறை : வேங்கை தவைவியாகவும், சுரும்புணவிரிந்தது அவள் பருவமலர்ச்சி யுற்றதாகவும், அதனிடத்துள்ள இறாவின் தேன் தலைவியிடத்து விளங்கும் இன்பமாகவும் புள் மொய்த்தல் தோழியர் சூழ்ந்திருப்பதாகவும், கசிந்து வீழ்ந்த தேனைக் குறமக்கள் உண்பது மிக்க நலனைப் பசலை படர்ந்து உண்டொழிப்பதாகவும், எஞ்சியது மந்தி வன்பறழ் நக்குதல் தலைவன் ஒரோவொருகால் தலைவியைக் களவிற் கூடுவதாகவும் கொள்க.
169. பல்லி படுமோ?
- பாடியவர் : ......
- திணை : முல்லை.
- துறை : வினை முற்றி மறுத்தரா நின்றான் நெஞ்சிற்கு உரைத்தது.
[(து–வி.) வினை முடித்தவனாக மீளும் தலைவனுக்குத் தலைவியின் நினைவு மேலெழுகின்றது. அவன், 'அவ் வேளையில பல்லி சொல்லும் சொல்லைக் கேட்டுத் தன் வரவை அறிந்திருப்பாளோ?' என நினைக்கின்றான்.]
'முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்!
வருவம்' என்னும் பருவரல் தீரப்
படும்கொல், வாழி, நெடுஞ்சுவர்ப் பல்லி!
பாற்றலை போகிய சிரற்றலைக் கள்ளி
மீமிசைக் கலித்த வீநறு முல்லை
5
ஆடுதலைத் துருவின் தோடுதலைப் பெயர்க்கும்
வன்கை இடையன் எல்லிப் பரீஇ
வெண்போழ் தைஇய அலங்கல்அம் தொடலை
மறுனுடன் கமழும் மாலை
சிறுகுடிப் பாக்கத்துஎம் பெருநக ரானே.
10
நடுரே! 'யாம் சென்று செய்யக் கருதியதனை முடித்தோமானால், நறிய நெற்றியை உடையவளே! அக் கணமே புறப்பட்டு வருவேம்' என்று முன்னர்க் கூறினேம்.