பக்கம்:நற்றிணை 1.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

33


எழுந்தாயில்லை. ஆகலின், நின் அழகிய நலமெல்லாம் கெட்டுப்போகுமாறு, அயலாரிருக்கும் இவ்விடத்தே, அழா திருக்கும் அதனையேனும் இனிச் செய்வாயாக! தாம். கருத்து: 'நின் களவுறவை யானும் அறிவேன்" என்ப சொற்பொருள்: எழில் நலம் - எழிலாகிய நலமும் ஆம். Q நாதுமலர் - அயலார். மா விலங்கு; தினைக் கதிரைக் கவருவதற்கு வரும் பன்றியும் யானையும் முதலாயின. பொன் - இரும்பு. பிதிர் - பொறி. கட்சி - கூடு; தங்குமிடம். பயிர் குரல் - நெருங்கிய தினைக்கதிர்கள். விளக்கம்: அழுதால் அயலார் களவுறவை அறியவும், அதனால் ஊரலர் மிகவும் நேருமாதலின், அழாஅல்' என்ற னள். 'நொதுமலர்' என்றது. அயலிலாட்டியாரான பிறரை. மாவீழ்த்துப் பறித்த பகழி' குருதிக் கறையினாலே நிறம் பெற்றுத் தோன்றும்; அத் தன்மையாகச் செந்நிறம் பெற்றன கண்கள் என்றனள். 'அழா அதீமோ' என்றது, அழுதால் பிறர் அறிந்து இல்லத்தாரிடம் கூறுதலால், அவர் இனித் தினைப்புனம் செல்லவேண்டா என்றனராயின், நின் காதலனைச் சந்திப்பதும் இனி இயலாதுபோம் என்ற தாம். மறைத்துக் கூறுதல், 'சுனையாடியதாலும் பொழிற் கண் விளையாட்டயர்தலாலும் கண்கள் சிவந்தன' என்பது போலக் கூறுதல். காவலர் மா வீழ்த்துப் பறித்த பகழி போன்ற கண்' என்றது. 'கானவன் ஒருவனை நினக்கு ஆட்படுத்திக் கொண்டதாற் சிவந்த கண்' என்றதுமாம். இறைச்சி; வேங்கை மலர் உதிர, ஓங்கும் மலை யிடத்துக் கூட்டிலிருக்கும் மயில், கிளிகள் தினைக் கதிர் களைக் கவர்ந்து செல்லுதலை அறியும்; அவை அறியா எனக் கிளிகள் தினைக் கதிர்களைக் கவர்ந்து செல்லும் என்றனள். அவ்வாறே, பரணிடத்திருக்கும் தான் அறிய வில்லை எனக் கருதித் தலைவன் தலைவியைக் களவிற் கூடிச் சென்றனன் எனினும், தான் அதனை நன்கு அறிந் திருத்தலை உணர்த்துகின்றனள். 14. நட்டனர் நல்குவர்! பாடியவர்: மாமூலனார். திணை: பாலை. துறை : இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/34&oldid=1627156" இலிருந்து மீள்விக்கப்பட்டது