நற்றிணை தெளிவுரை
345
179. பொய் புகலாகப் போயினள்!
- பாடியவர் : .........
- திணை : பாலை.
- துறை : மனை மருட்சி.
[(து–வி.) தலைமகனுடன் சென்றுவிட்ட தன் மகளை நினைந்தாள் நற்றாய். தன் இல்லிலிருந்தவாறு பலவாறாகச் சொல்லிச்சொல்லி மனம் மயங்குவதாக அமைந்த செய்யுள் இது. மென்மையும் இளமையும் கொண்டாளான தன் மகள் எவ்வாறு வழி நடப்பாளோ? அவளைப் பிரிந்து எவ்வாறு தானும் ஆற்றியிருப்பதோ? என அவள் புலம்புகின்றாள்.]
இல்லெழு வயலை ஈற்றுஆ தின்றெனப்
பந்துநிலத்து எறிந்து பாவை நீக்கி
அவ்வயிறு அலைத்தஎன் செய்வினைக் குறுமகள்
மானமர்ப் பன்ன மையல் நோக்கமொடு.
யானுந் தாயும் மடுப்பத் தேனொடு
5
தீம்பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி
நெருநலும் அனையள் மன்னே; இன்றே.
மையணற் காளை பொய்புக லாக
அருஞ்சுரம் இறந்தனள் என்பதன்
முருந்தேர் வெண்பல் முகிழ்நகை திறந்தே.
10
இல்லிடத்தே முளைத்துப் படர்ந்திருந்த வயலைக்கொடியினைக் கன்றையீன்ற பசுவானது தின்றுவிட்டது; அதைக் கண்ட அவள் கலங்கினாள்; தான் விளையாடியபடியிருந்த கையிடத்துப் பந்தை நிலத்திலே எறிந்தாள்; தான் வைத்திருந்த பஞ்சாய்ப் பாவையினை ஒருபுறமாகப் போட்டாள்; தன் அழகிய வயிற்றிடத்தே கையால் அடித்துக் கொண்டு புலம்பினாள். செய்யுங் காரியங்களிலே தேர்ந்த என் இளமகளின் தன்மைதான் இத்தகையது ஆயிற்றே! யானும் செவிலித்தாயும் அவளுக்குப் பாலினை ஊட்ட முயன்றபோது, மானின் அமர்த்த நோக்கைப் போன்ற மயங்கிய பார்வையினை யுடையளாய், தேன்கலந்த இனிய பாலினையும் உண்ணாளாய். விம்மி விம்மிப் பெரிதும் அழத் தொடங்கினளே! நேற்றைக்கும் அத்தன்மையளாகவே இருந்தனளே! இன்றோ, கரிய அணலையுடைய காளையாவானது பொய்யுரைகளே தனக்குரிய பற்றுக்கோடாகக்ந.—22